பக்கம்:சுலபா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 éᎦöyüfr

போலக் கோடீசுவரகை உதவினவி. முதலில் இல்லா விட்டாலும் நாளடைவில் சுலபா கூடச் சில கோடிகளை இரகசியமாகக் கோகிலாவின் கணவனிடம் பிளுமி பெயர்களில் முதலீடு செய்திருந்தாள். சிநேகிதமாகப் பிடித்து மெல்ல மெல்லச் சுலபாவைக் கணவனின் தொழில்களில் பணம் போட வைத்துவிட்டாள் கோகிலா.

மத்திய மாநில ஆளும் கட்சிகளுக்கும் ஆட்சியைப் பிடிப்பது போல முன்வரும் கட்சிகளுக்கும் தேர்தல் நிதி ரொககமாகத் தரவேண்டி வரும்போதெல்லாம் கோகிலாவின் கணவருக்குச் சுலபா தான் உதவ வேண்டியிருந்தது. தேர்தல் நிதிக்குக் கணக்கில் காட்டாத ரொக்கம் வேண்டும் என்று கழுத்தறுத்தால் எங்கேயிருந்து அவ்வளவு பெரிய தொகையை ஒரே நாளில் தேடுவது? சுலபாவிடம் தான் சுலபமாக அது கிடைத்தது. சுலபாவுக்குத் தெரியாமலே அவளுக்கு நட்பு வலை விரித்துத் தன் அந்தரங்கங்களை அவளுக்குக் கூறுவது போல் அவன் அந்தசங்கங்களை ஒன்றுவிடாமல் அறிந்துஅவசரப்பட்டு விடாமல் சில வருஷங்கள் வரை இந்தச் சிநேகிதத்தைப் பயன் கருதாத வெறும் நட்பாகவே தொடரும் படி பொறுத்துக் காத்திருந்து காலம் கனிந்தவுடன் பணமாகக் 'கேஷ் பண்ணிக் கணவனுக்கு வாங்கிக் கொடுத்த சாதுரியம் கோகிலாவினுடையது.

கோகிலாவின் கணவன் உலகின் தலைசிறந்த ஒரே ஒரு ராஜதந்திரியாக-டிப்ளமேட்டிாக கின்னஸ் புத்தகத்தில் இடம பெற வேண்டிய அத்தனை சாமார்த்தியம் உள்ளவன், படு ஸ்மார்ட் ஆசாமி. - - :

'நீ முதலில் உன் எதிராளியின் பூட்டப்பட்டி மனக் கதவுகளைத திறப்பதற்காக உன் சொந்த இரகசியங்களையும் அந்தரங்கங்களையும் எதிராளியிடிம் தாராளமாகத் திறந்து சொல்லத் தொடங்கு உன் செயலால் எதிராளியின் மனக் கதவுகள் பூட்டுக்கள் எல்லாம் திறக்கப்படுகிறவரை தொடர்ந்து பேசு எதிராளியின் மனக்கதவுகள், போதுமான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/88&oldid=565756" இலிருந்து மீள்விக்கப்பட்டது