பக்கம்:சுலபா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 87

அளவு திறந்துவிட்டதை அறிந்ததும் உடனே உன் மனக் கதவுகளைப் பத்திரமாக மூடிப் பூட்டிவிட்டு எதிரே திறக்கப்பட்ட கதவுகளுக்குள்ளே நுழைந்து என்னென்னவற்றைக் கடத்திக் கொண்டு வர முடியுமென்று பார்! டெல் மோர் nக் ரெட்ஸ் இன் ஆர்டர் டு கெட் மோர் n க்ரெட்ஸ் ஃப்ரம் அதர்ஸ்’’-என்பதுதான் கோகிலாவின் கணவன் அடிக்கடி கூறும் ராஜதந்திர தத்துவம். மனிதர்களையும், மனங்களையும் கவர்ந்து வசப்படுத்தும் உத்திகளில் அவன் நிபுணன், அவனுடிைய திறமையான "கோச்சிங்'கிலும் ஸ்பெஷல் கிளாஸாலும் சரிபாதிதான் கோகிலாவே தயாராகியிருந்தாள்.

‘போருது யூ ஹாவ் டு லேர்ன் மோர்-என்று அவளிடம் சொல்வசன் அவன். சுலபாவை அவளது அனைத்து அந்தரங்கங்களோடும் தன் சிநேகிதியாகச் சிறைப்பிடிக்கக் கணவன் சொல்லிக் கொடுத்த வழிகளில்தான் முயன்று வெற்றி பெற்றிருந்தாள் கோகிலா. கோகிலாவின் கணவனைப் பற்றிச் சொல்லும்போது, "நத்திங் இஸ் இம்பாஸ்பிள் ஃபார் மிஸ்டர் கே. வி. லிங்கம்' என்று பிஸினஸ் சர்க்கிளில் சொல்லுவார்கள் கொச்சையாகவும், பொருமையாகவும் பேசும்போது, "வைத்திலிங்கமா? அவன் பெரிய வல்லாள கண்டனுச்சே' என்பார்கள். கே.வி.லிங்கம் என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட கே. வைத்திலிங்கத்தால் முடியாத காரியமே இல்லை. எந்த இக்கட்டிான நிலையிலும் சிக்கலின் மறுநுனியைக் கண்டுபிடித்து அழகாகச் சரி செய்து சிக்கலைத் தீர்த்துக் கொடுத்துவிட அவளுல் முடியும். தொழிலதிபர்களிடையே அவன் நிபுணளுகப் பெயர் பெற்றிருந்தான்.

ஒரு சமயம் டெல்லியில் ஒரு இண்டஸ்ட்ரியல் லைசென்ஸ் படுதாமதமாக இழுத்தடித்தது. இன்ஷ்யூரிங் அதாரிட்டி ஆபீஸர் எதிலும் வசப்படாமல் நழுவினன். தூண்டித் துளைத்து விசாரித்ததில் அந்த ஆபீஸர் கஜாரண்யசுவாமிகள்' என்ற மெளனச் சித்தரிடம் அளவு கடந்த பக்தியுள்ளவர் என்று தெரிந்தது. கஜாரண்ய சுவாமிகள் மடத்து நிர்வாகியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/89&oldid=565757" இலிருந்து மீள்விக்கப்பட்டது