பக்கம்:சுலபா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 56)Լitr

பிடித்து அடுத்த மாசம் நடக்கிற விசேஷ பூஜைக்கு வந்து ஆசிபெற வேணும் என்று சுவாமிகளே அநுக்கிரகிப்பதாக ஒரு கடிதம் டெல்லி ஆபீசருக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று.

கஜாரண்யத்தில் நடந்த அந்த பூஜைக்கு டெல்லி ஆபீஸர் வந்தார். கோகிலாவும் அவள் கணவரும் கூடச் சென்ருர்கவி. தரிசனம் முடிந்ததும் மடத்து நிர்வாகி கோகிலாவையும் அவள் கணவரையும் டெல்லி ஆபீஸர் முன் அறிமுகம் செய்து, “நம் சுவாமிக்குப் பரமபக்தர்கள்! இந்தத் தம்பதிகள் மேல் அவருக்குக் கொள்ளை விசுவாசம்' என்ருர். கோகிலாவின் கணவரது ஏற்பாடு இது. அடுத்த வாரமே நேரில் போய் லேசென்ஸ் பெற்று வர முடிந்து விட்டது. இதற்குத் திட்ட மிட்டதே கோகிலாவின் கணவன்தான். மற்ருெரு சமயம் ஒரு லைசைன்ஸில் கையெழுத்திட வேண்டிய ஆபீஸருக்காகத் திருத்துறைப் பூண்டிக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து ஒரு லாரி லோடு ஏட்டுச் சுவடிகளுடன் ஒரு நாடிஜோஸியனையே டெல்லிக்கு அழைத்துப் போக வேண்டி வந்தது. அழைத்துப் போய் வேலையை முடித்துக் கொண்டு வந்தார்.

"டெல்லிங்கிறது ஒரு பெரிய ஹ்யூமன் மியூலியம். எத்தனைதை மனங்களும் மன விகாரங்களும அங்கு உண்டோ அததனைககுடி பரிகாரங்கள் உண்டு எனபான கோகிலாவின் கணவன.

"சில பேர் பாட்டில் கேட்பான். சிலபேர் அழகைக் கேட்பான். சிலபேர் ஜோஸியம் கேட்பான். இன்னம் சிலபேர் *ரெண்டு பாட்டில் தென்னமரக்குடி எண்ணெய் வேணு மேன்னு - ஏதாவது நாட்டு மருந்தாச் சொல்லி அனுப்பு வான், ஸ்காட்ச் முதல் தென்னமரககுடி எண்ணெய் வரை எல்லாமே காரியத்தைச் சாதிச்சுக் குடுக்கும். மலைக்கப் பிடாது. மிரளப்டாது. துணிஞ்சு ஈஸியா எடுத்துக்கிட்டு முயற்சி பண்ணின எல்லாமே முடியும்' என்று ஊர்திரும்பி வந்து கோகிலாவிடம் விவரித்துக் கொண்டிருப்பது அவள் கணவனின் வழக்கமான செயல்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/90&oldid=565758" இலிருந்து மீள்விக்கப்பட்டது