பக்கம்:சுலபா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 89

'இது போருமே? மேலே மேலே வளரணும்னு ஏன் நாயா அலையனும்’ என்று சில சமயம் கோகிலா அவனை நேருக்கு நேர் கேட்பாள்.

"ேஎனக்கு இது போருது கோகீ! என்ளுேடது மிருகப்பசி. அதாவது அனிமல் அப்பீடைம். என்னுலே முடியாததுன்னு எதுவும் இருக்கப்படாது' என்பான் அவன். அந்த வெறிதான் அந்த வெற்றி வெறிதாகி முடிவாக ஒரு கொத்து வியாதிபோல அவளையும் சேர்த்துப் பீடித்து விடும், சுலபாவின் இருபத்தெட்டாவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. பொதுவாக அவள் இருபத்தாறு, இருபத்தேழு, இருபத்தெட்டு என்று அடுத்தடுத்து வயது கூறியபோது கோகிலா கூட அதை நம்பவில்லை. வயதைக் குறைத்துக் கூறிக் கொள்வது நடிகை களைப் பொறுத்தவரையில் ஒரு மரபாகவும் நாகரிகமாகவும் தகுதியாகவுமே கருதப்பட்டது. நடிகர்களில் கூடப் பலரி அப்படித்தான் செய்தார்கள். அதில் "மார்க்கெட் ரகசியம்" இணைந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்தரங்கமான இரண்டொருவரைத் தவிர யாரும் நடிகைகள் தங்கள் பிறந்த நாள் பற்றிச் சொல்லுவதே இல்லை. அதுவும் உண்மையைச் சொல்லுவதே இல்லை. -

நடிகையைப் பெற்ற தாயால் கூடி அனளது சரியான பிறந்த தேதியைச் சொல்ல முடியுமா என்பது கேள்விக்கறி தான்-என்று கூட வேடிக்கையாக ஒரு வசனம் சினிமா உலகில் உண்டு. -

உயிர்த்தோழி கோகிலா சுலபாவிடம் எத்தனையோ உரிமைகளை எடுத்துக் கொண்டும் துணிந்து ஒருநாள் கூட "ஏன்டி சுலபா! எனக்குத் தெரிந்தால் என்ன? உன் உன்மை யான வயதே இருபத்தெட்டுத்தாளு?’’-என்று வினவக் கூடி முயன்றதில்லை. ஒரு சினிமா நடிகையிடம் வயது விசாரிப் பது என்பது தயங்கி ஒதுங்க வேண்டிய சென்ஸிடிவ் இஷ்யூ" வாகக் கருதப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/91&oldid=565759" இலிருந்து மீள்விக்கப்பட்டது