பக்கம்:சுலபா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 BřSÖff;"

'எனக்கு என்றும் பதினெட்டுத்தான்" என்பது போலவே பல நடிக்ைகள் நடந்துகொண்டார்கள். ஒரு நடிகை கற்பை இழப்பதை விட இளமையை இழப்பதையோ இழப்பாகக் காட்டிக் கொள்வதையோதான் அதிகம் வெறுத்தாள். அதாவது தமக்கு வயதானதாகக் காட்டி மனம் ஒப்பவில்லை.

சுலபாவின் வயது பற்றிக் கோகிலாவுக்கு மட்டுமின்றிக் கவிதாவுக்கும் கூடச் சந்தேகங்கள் உண்டு. இருவரும் எவ் வளவோ முயன்றும் சுலபாவின் உன்மை வயதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரபூர்வமாகச் சுலபாவே அறிவித்த இருபத்தேழுதான் நம்பப்படி வேண்டியிருந்தது, இருபத்தெட்டு இப்போது வந்துகொண்டிருந்தது. பள்ளிச் சான்றிதழ்களை வைத்துத் துப்புத் துலக்க முடியாது. அவள் மழைக்குக்கூடப் பள்ளிகளில் ஒதுங்கியதில்லை, அதல்ை சர்டிபிகேட்டுகளில் டிேட் ஆஃப் பெர்த் பார்க்க வழியில்லை. சுலபாவின் தாய் என்று அறிமுகப்படுத்தப்பட்ட நரசம்மா வுக்கும் வயது பற்றி எல்லாம் மூச்சுவிடக்கூடாது என்ற கடுமை யான எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது போலும். ஏனெனில் வயது பற்றி யாராவது பேச்சை ஆரம்பித்தாலே நரசம்மா விதிர்விதிர்த்து நடுங்கிள்ை. இதனுல் நம்பும்படியாக இல்லாவிட்டாலும் சுலபாவே அதிகாரபூர்வமாகச் சொல்லி விருந்த தேதியை வைத்துக் கணித்து அவளுடிைய 28-வது பிறந்தநாள் இன்னும் சில வாரங்களில் வர இருப்பதைக் கோகிலா அநுமானித்தாள்.

ஆளுல் நடிகை சுலபாவின் கற்பனைப் பிறந்தநாட்கள் மூட இரகசியமானவை. கோகிலாவுக்கு மட்டுமே தெரிந் தவை. ஒவ்வொரு பிறந்த நாளையும் ஒரு புதிய மகிழ்ச்சியும் அநுபவம் கிடைக்கிற மாதிரி எப்படிக் கொண்டாடுவது என்பதையே கோகிலாதான் திட்டமிடுவாள், பெரும்பாலும் அது சுலபாவுக்குப் பிடித்தமாதிரியே இருக்கும். கோகிலாவும் சுலபாவுமே அதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். இதுகூடி இரண்டு மூன்று வருடங்களாகத்தான். அதற்கு முன்போ கொண்டாட்டமே கிடையாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/92&oldid=565760" இலிருந்து மீள்விக்கப்பட்டது