பக்கம்:சுலபா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. .91

இருபத்து ஆருவது பிறந்தநாளை மேற்கு மலைக் தொடரில் நடுக்காட்டில் ஒரு கூடாரம் அமைத்துத் தங்கி விநோதமாகக் கொண்டாடினர்கள் அவர்கள். இருபத்து ஏழாவது பிறந்த நாளைக் காஷ்மீரில் பூரீநகரில் தால் ஏரியின் நீர்ப்பரப்பில் மிதக்கும் ஒரு படகு வீட்டில் கொண்டாடினர்கள். அந்த விகாரா (பட குவீடு) ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் வசதிகள் உள்ளதாயிருந்தது. கோகிலா மட்டுமே கூடப் புறப்பட்டுப் போயிருந்தாள், -

வரப்போகும் 28-வது (அதிகாரப்பூர்வமான) பிறந்த நாளை எப்படிக் கொண்டிாடுவது என்று ஞாயிறன்று சுலபா வின் வீட்டில் டின்னருக்குப் போகும்போது அவளிடம் சஸ்பென்ஸாய் அறிவிப்பதாக முடிவு செய்திருந்தாள் கோகிலா, சுலபா தன் வீட்டுக்கு முந்திய டிவினருக்கு வந்த போது தெரிவித்த சில ஆசைகளின் அடிப்படையில் கோகிலா அதை யோசித்து வைத்திருந்தாள். சுலபாவின் மனநிலையைதவிப்பை - நீண்டநாள் காம்ப்ளெக்ஸ்"களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்பக் கோகிலா சிந்தித்து வைத்திருந் தாள். சுலபாவும் அதற்கிசைவாள் என்றே கோகிலாவுக்குத் தோன்றியது. இதில் சுலபாவை அவள் நம்பினாள். சுலபாவின் வீட்டுக்கு அந்த ஞாயிறன்று கோகிலா விருந்துக்கு வந்த போதே இரவு எட்டுமணி. முன்னெச்சரிக்கையாகக் கவிதாவை வீட்டுக்கு அனுப்பியிருந்தாள் சுலபா. நரசம்மா வீட்டில் இருந்தாள். மாடியில் சுலபாவின் ஏ.சி. செய்த தனியறையில் சந்திப்பு. கீழே டைனிங் ஹாலில் பத்து மணிக்குச் சாப்பிடி வருவோம்! இன்னின்ன அயிட்டங்கள் மெனு' என்று நரசம்மாவிடமும் வேலைக்காரியிடமும் உத்தரவு போட்டாயிற்று. எந்த ஃபோன் வந்தாலும் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணுதே! நீயே பேசிக்கொள். யார் தேடிவந்தாலும் நீயே சமாளித்துச் சொல்லி, அனுப்பிவிடு.' என நரசம்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தாள் சுலபா.

தானும் கோகிலாவும் சந்திக்கிற சந்திப்புக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாதென்று திட்டமிட்டிருந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/93&oldid=565761" இலிருந்து மீள்விக்கப்பட்டது