பக்கம்:சுலபா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ptr.tır. 93

நெடி, சாராயனாடை, வியர்வை நாற்றமும் நிறைந்த மனிதர் களின் அழுக்கடைந்த முடை நாற்றமெடுத்த மலிவான படுக்கைகளில் தள்ளிவிடக் காரணமாயிருந்த குப்பைய ரெட்டியை அவள் இன்னும் மறக்கவில்லை. .

ஆளுல் இன்று அவள் இருக்கிற இடமே இன்டிமேட் ரெவ்லான் வாசனையில் மிதந்தது. இதற்கு அடிப்படிைக் காரணமே அவள் குமட்டும் நாற்றங்களிலிருந்து மேலெழுந்து வந்தது தான்.

கோகிலா ஆேக்டிகள்:

"உலகின் தலைசிறந்த இங்கிதமான ஆன்வேட்கை பற்றிய கவிதையை நம்மூர் ஆண்டாள்தான் பாடியிருக்கிருள்... தெரியுமோ?"

"ஆண்டாள்ளு பக்தி மான்களிலே வைத்துப் பேசறது தானே வழக்கம்? நீ இப்படிச் சொன்னல் என்ன அர்த்தம்?"

"தான் விரும்புகிற ஆணுக்காகத் தொடுத்து வைத்த மாலையை முதலில் தன்மேல் சூட்டி அழகு பார்ப்பதும்-தான் விரும்புகிற ஆணின் அழகிய உதடுகள் கருப்பூரவாசனை உள்ளவையாயிருக்குமா? தாமரைப்பூ வாசனையுள்ளவையாயி ருக்கமா? இனிப்பாயிருக்கமா? என்றெல்லாம் அந்த வாயில் ஊதப்பட்டி சங்கிடம் விசாரிப்பதும்-காமத்தின் இங்கிதமான வெளிப்பாடில்லவா?"

'உன்னை மாதிரி- அதென்ன பிராடிா- ஃபிராய்டிா என்னமோ அடிக்கடி ஒரு பேரு சொல்லுவியே-அவனைப் படிச்சிருக்கிற பொம்பிளைங்கள்ளாம் ஆண்டாளைப் பத்திப் பேசறதே பாவம்டி கோகிலா..."

"கருப்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித் திருக்குமோ... சொல்லாழி வெண் சங்கே'ன்னு பாடிருக்காளே ஆண்டாள் அதுக்கு வேற என்னடி அர்த்தம்?" . - . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/95&oldid=565763" இலிருந்து மீள்விக்கப்பட்டது