பக்கம்:சுலபா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

preria. 95.

நிறத்திற்குப் பளிரென்று இருக்கிற- பிறந்ததிலேயிருந்து பெண்களையே அநுபவித்திராத ஓர் இளம் சந்நியாசியை அடை யும் துடிப்பு என்னுள் இடைவிடாமல் இருக்கிறது. இதைத் தவிர்க்களோ தணிக்கவோ முடியவில்லை. இது தீயாக உள்ளே கனல்கிறது."

'அவன் உடம்பில் கர்ப்பூரம் மணக்க வேண்டும்! இதழ் க்ளில் ஏலக்காய் சுவைக்க வேண்டும். தோள்களில் சந்தனம் கமகமக்க வேண்டும். அவன் சரீரம் தாமரைப் பூப் போல் இருக்க வேண்டும். இல்லையாடி சுலபா?" -

"நிச்சயமாக அப்படிச் சில இளம் சந்நியாஸிகளை நானே பார்த்து மோகித்திருக்கிறேன். முற்றிய தோங்காயின் நிறம் போல் கறையே இல்லாத தூய பல் வரிசையால் அவர்கள் சிரிக்கும் போது மோகத்தால் கிறங்கியிருக்கிறேன். ஆண்டாளைப் போல் பாடமுடிந்திருந்தால் என் உள்ளுணர்வு களைப் பாட்டாகவே அவர்களுக்கு நானும் எழுதி அனுப்பி யிருக்க முடியும்! என் தாயங்களும் தாகங்களும். அப்படியே மனத்துக்குள் நிற்கின்றன. பாட்டிாக வரவில்லை! வேறுவித நெருப்பாய் உள்ளே குழைகிறது.”

'எந்த அழகிய துறவியிடமாவது பாதபூஜை- காணிக்கை அது இது என்ற சாக்கில் நீ நெருங்கியிக்கிருயா? ஜாடைமாடிை யாகவாவது உன் அந்தரங்கத்தை நீ ஆசைப்படுகிற துறவிக்கு எட்டி விட்டிருக்கிருயா?"

'என் ஆசைகள் ஒருதலைக் காமமாகவே உள்ளடிங்கி,

കുl.ങ്ങ என்பதுதான் உண்மை. கணிசமாய் விரக்தியடிையும் நிலைக்கு இந்த ஆசைகள் என்னைத் தள்ளியதுதான் உண்மை." g

'நீ ஒரு விநோதமான பென்னடி சுலபா .'

'திருடனுக்குக் கன்னக்கோலை ஒளித்து வைக்க இடமில் லாததுபோல் என்னுடைய இந்த அந்தரங்க வேட்கையை நான் யாரிடமும் இதுவரை வெளியிடிக்கூடி இல்லை. உன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/97&oldid=565765" இலிருந்து மீள்விக்கப்பட்டது