பக்கம்:சுலபா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 轟酚ü醉

னிடம் தான் ஏற்கெனவே ஒரு தடவை ஜாடிையாய்ச் சொன் னேன். இன்று வெட்கத்தை விட்டு வெளிப்படையாய்ச் சொல்லுகிறேன். சில பால சந்யாசிகளின் அருகே திற்கிற போது அவர்கள் மேனியிலிருந்து துளசியும் சந்தனமும் மணப் பது போல் உணர்வேன். திருப்பதியில் போய் வெங்கடசசல பதிக்கு முன் கர்ப்பக் கிருகத்தில் தரிசனம் செய்கிற ஒவ்வொரு தடவையும் இப்படி வாசனையை உணர்ந்து என் நினைவுலகச் சந்தியாசியைத் தழுவியணைத்துக் கோவிலில் நினைக்கத் தகாததை எல்லாம் நினைத்துப் பரவசப் படுவேன். எவ்வளவோ முயன்றும் என்னுல் இதைத் தவிர்க்க முடியவில்லையடி கோகிலா.'

'உன்னை அடிையக் கோடீசுவரன்கள் பலர் தவம்

கிடக்கிருன்கள். நீயோ ஒரு சுத்தமான இதுவரை பிரம்ம சரியம் கெடாத ஒரு புதுச் சாமியார் வேண்டும் என்கிருய்!"

"அது என் ஆசையா அல்லது பழிவாங்கும் வேட்கையா என்று உடனே பிராய்டில் இறங்கிவிடாதே! என்னுள் ஒரு வெறியாகவே கனன்று வரும் விஷயம் இது."

..இதற்குப் பதில் சொல்லாமல் சிறிது நேரம் யோசித் தாள் கோகிலா. சுலபாவின் முகத்தையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள், பின்பு நிதானமாக அவளை வினவிள்ை.

"உன்னுடைய இருபத்தெட்டாவது பிறந்தநாள் வரு கிறதே; அதற்குப் பரிசாக அன்றைய தினம் நீ விரும்புகிற வகையிலான கறைபடாத-புத்தம் புதிய சாமியார் ஒருத்தரை உனக்கு நான் அளித்தால் நீ சந்தோஷப்படுவாயா?"

"அது எப்படியடி சாத்தியம்?"

"இப்படியெல்லாம் கேள்வி கேட்காதே! உன் அந்தாங்கி சிநேகிதியை நம்பு. உன்னுடைய இருபத்தெட்டாவது பிறந்த நாளில் உனக்குக் கர்ப்பூர வாசனையும், ஏலக்காய் நறுமண்மும் சந்தன கமகமப்பும் கிடைக்கும்-'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/98&oldid=565766" இலிருந்து மீள்விக்கப்பட்டது