பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

103

திரத்தையும் விட மேர்சமாக நடத்த ஒர் ஆணுக்கும்.அவனைச் சார்ந்தவர்களுக்கும் உரிமை வழங்கும் ஒர் அமைப்புத்தான் குடும்பம், இந்த மையமான அதிகார உரிமை குவியலை மாற்றமாட்டோம் என்றால், அவள் வெளியேறித்தான் அதைச் சீராக்க முனையவேண்டும்.

அவள் படிகடக்கையில், அம்மா.நீ போறியாம்மா...? என்று பரத் ஓடிவருகிறான். கவிதா நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்புகிறாள். சாரு தந்தைக்கு அஞ்சி ஒதுங்கி நின்றாலும் உதடுகள் துடிக்கின்றன.

‘ஏய், எல்லாம் உள்ள போங்க! பரத். இங்க வா! நீ அம்மா அம்மான்னு போனா ஒண்ணும் கிடையாது. ரிமோட் கன்ட்ரோல் ப்ளேன் வாங்கிட்டு வருவேன். ரோபோ வாங்கித் தருவேன். அம்மாவோட போனால் ஒண்ணும் கிடையாது!’ ஒரு கையில் பிள்ளையைப் பிடித்துக்கொண்டு அவன் ஆசை காட்டி நிபந்தனை விதிக்கும் நேரத்தில் அவள் விடுவிடென்று தெருவில் இறங்கிப் போகிறாள்.

யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.


13

பொதுத் தொலைபேசி எப்போதும் ஒழுங்காக இயங்கிய தில்லை. இவளுக்கும் பழக்கம் இல்லை. எனினும் தபால் அலுவலகத்தை ஒட்டிய தொலைபேசி அது. சில்லறைமாற்றி வைத்துக்கொண்டு ரத்னாவின் பல்கலைக்கழக விடுதி எண்ணுக்கு அவள் சுழற்றுகிறாள். உடனே கிடைக்கவில்லை. நாலைந்து தடவைகள் முயன்றபிறகு மணி அடிக்கிறது. ‘ஹலோ...’ என்ற ஆண்குரல் கேட்கிறது. இவள் நம்பரைச் சொல்கிறாள் ‘...எஸ்.திஸ் இஸ் அபு ஸ்பிக்கிங்!