பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

107

உலர்த்த வசதி கிடையாது. கூடுமான வரையிலும் அறை துப்புரவாக இருக்கிறது. இருவரும் பகிர்ந்து கொள்ள ஒரு பெரிய இரும்பு அலமாரி...பதிக்கப்பெற்றிருக்கிறது. மேசைக்கு இருபுறங்களிலும் இழுப்பறைகள் இருக்கின்றன. அலங்காரக் கண்ணாடி, நடுவில் பவுடர், நகப்பாலிஷ். போன்ற ஒப்பனை சாமான்கள் இருக்கின்றன. இன்னொரு சிறு மேசை எழுது வதற்குப் பயன்படும்; சாப்பிடுவதற்கும் பயன்படும்போலும்!

மூலையில் ஒரு மண் கூசாவும், மொட்டையான உலோகத் தம்ளரும் துப்புரவாக இருக்கின்றன. இரு கட்டில்களுக்கும் நடுவே இருக்கும் மெத்தென்ற விரிப்பு - பூ வேலை செய்த, பருத்தி ரகம்தான். உள்ளே பேர்ட்டுக் கொள்ளும் ஸிலிப்பர்கள் இரண்டு ஜோடிகளும் அந்த கட்டிலுக்குக் கீழே இருக் கின்றன. வராந்தாவைப் பார்த்த ஜன்னலின் சிறு திண்ணை யில் சில புத்தகங்கள்...ஒரு பெரிய சிப்பி ஒட்டில் சாம்பல் குவியல்...அவளுள் ஒரு குலுக்கல்.

ஸிகரெட்டையும் புடிச்சிட்டுப் போறது...!

ரோஜாமாமி கூறியது நிசம்தானா? கட்டவிழ்ந்து உண்மையில் அவள் எந்தக் கும்பலிடையே வந்திருக்கிறாள்?

இவர்களுடைய சுதந்தரம், ஆண் பெண் எந்தக் கட்டுப் பாடின்றியும் உறவு கொள்வதும், மதுவருந்துவதும், புகைப்பதும் என்ற அரண்களைத் தகர்ப்பதும்தானா. உண்மையில்’ இந்தக்குற்றச் சாட்டுக்கள், உண்மைதானா?

ஒராயிரம் கேள்விகள் மொய்க்கின்றன.

சாம்பற் குவியலிலே, வெண்மையாக சிகரெட்டின் ஒரு துண்டு போல் கிடக்கிறது...இருக்கலாம்.

வெட்ட வெளிக்காற்றில் குளிர்ச்சியும் உண்டு; தூசியும் தவிர்க்க முடியாததுதான். ரொட்டித் துண்டுகளையும் குப்பியிலிருந்த தேநீரையும் காலி செய்கிறாள். அடுக்கில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் பிரிக்கிறாள். ‘ஸூஸான் க்ரிஃத்ஸ் எழுத்துக்களில் இருந்து பொறுக்கு மணிகளாகத் தேர்ந்தெடுக்