பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

சுழலில் மிதக்கும் தீபங்கள்


ரோஜாமாமி அதைத்தான் குறிப்பாகச் சொல்லிக் காட்டினாள். இப்போது, இந்த அவசரத்துக்கு அது உதவுகிறது. வங்கியில் வைத்துப் பணம் வாங்கியிருக்கிறாள்.

ஆனி வருகிறாள்.

“ஹலோ-?...சித்தரஞ்சன் பார்க் போனிங்களா கிரிஜா?”

“பார்த்தேன் மதர். ஃபர்ஸ்ட்லேந்து வேலைக்கு வாங்கன்னா...இப்ப ஃபோர் ஹன்ட்ரட்தான் அவங்களால குடுக்க முடியுமாம். எல்லாம் ஜுக்கி ஜோப்டி சில்ட்ரன், ரிஃப்யூஜி சில்ட்ரன்னாங்க.’’ -

“ஹா...ஃபர் த ப்ரஸண்ட் ஒத்துக்குங்க. உங்க வீட்ல எல்லாரும் பார்த்து ஏற்பாடு பண்ணியிருக்கோம். உங்க ஸ்ர்ட்டிபிகேட், மற்ற சாமான்களெல்லாம் கொண்டு வந்து குடுத்திடறதாச் சொல்லி இருக்காங்க. மதர் இன்லா...என்ன அப்படி அழுவுது?”

கிரிஜாவுக்கு இது எதிர்பாராத செய்தி.

“அவங்க யாரும் இல்லை. உங்க மதர் இன்லா, மிஸ்டர் சாமிநாதன் தான் இருந்தாங்க. நம்ம லாயர் பிரகாஷ்தான் பேசினார். சட்டுனு இப்ப டைவர்ஸ்னு ஒண்ணும் முடியாது... அவங்க திங்ஸ்’ல்லாம் கொண்டு வந்து குடுத்திடணும்னு கேட்டோம். சரின்னிருக்காங்க...”

“வேற ஒண்னும் சொல்லல...!”

“ஏன்? காம்பரமைஸ் பண்ணிக்கவா?”

ஆனி சிரிக்கிறாள். கிரிஜாவினால் சிரிக்க முடியவில்லை.

மதர் இன்லா எதுக்கு அழுதாங்க?

ரத்னா வருகிறாள். இவள் தோற்றத்தைப் பார்த்ததும் “வெரிகுட்...?” என்று ஆமோதித்து முதுகில் தட்டுகிறாள்.

“கிரிஜா, நீங்க ரொம்ப ஃபார்வர்டாயிட்டீங்க. நம்ம அழுக்கு மரபுகளைத் தூக்கி எறிஞ்சிட்டீங்க! நான் ஒரு தமிழ் சினிமா பார்த்தேன். பேரு நினைப்பில இல்ல. அவ டைவர்ஸ் பண்ணிட்டு வேற ஊருக்கு வரா. வந்த இடத்தில் பழைய