பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

சுழலில் மிதக்கும் தீபங்கள்


அடோலஸண்ட் ஏஜ்-குமரப்பருவம். படிக்கும் பள்ளியோ ஆடம்பர வாழ்க்கை வாழும் செல்வர் வீட்டுச் சிறுவர் சிறுமியர் உள்ள பள்ளி...

இந்த எண்ணங்களிலிருந்து விடுபடவே முடியவில்லை.

எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை. கதவை இடிக்கிறார்கள், ஆனால் இவளால் கதவைத் திறக்க எழுந்து செல்ல முடியவில்லை. கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கிறாள்.

கிரி...கிரிஜா, எழுந்திருந்து கதவைத் திறவுங்கள்...கவி... கவிதாபாத்ரூம்ல கெய்ஸர் ஆக்ளிடன்டாகி செத்துட்டாளாம். எழுந்து. ஐயோ...ஐயோ, ஐயோ, கவிதா...!

அடிவயிறு சுருண்டி கொள்ள அலறுகிறாள், ஆனால் கண்களையே திறக்க முடியவில்லை. எழுந்து கதவை எப்படித் திறப்பாள்?

கிரி...? திரி..!

கதவை உடைக்கிறார்கள் ரத்னா, ரத்னாதான்.

“ஐயோ, இவர்கள் பேச்சைக் கேட்டுத்தானே சலனமடைந்தாள்?

கவிதா, கவியம்மா, ஒருநாள் கூட உன்னை அடுப்படியில் விட்டதில்லையே. கெய்ஸர் பிளக் சரியில்லாமல் இருந்திருக்க வேண்டும். தகப்பனும் பாட்டியும் கவனித்திருக்க மாட் டார்கள்...வாழும் வசதியாம் இது யாருக்கு வேண்டும்?... கவி...கவி...

கதவை உடைக்கிறாள், கிரி. கிரிஜா! வாட் ஹேப்பன்ட் டு ஹர்?..

முகத்தில் தண்ணிர் வந்து விழுகிறது.

சட்டென்று விழிப்பு வரக் குலுங்கி எழுந்திருக்கிறாள்.

கதவைத் திறக்கிறாள்.