பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

சுழலில் மிதக்கும் தீபங்கள்


‘அந்தப் பேச்சே இல்லை ரத்னா. அப்படி அவள் சொல்லி யிருக்கும் பட்சத்தில், கீழே காரில் அமர்ந்தவன் என்னைச் சந்திக்க விரும்பியிருந்தால், நான் ஒரு வேளை மனம் இறங்கிப் போயிருந்திருப்பேன் என் குழந்தைகளை உத்தேசித்து. ஆனால்... அவன் செருக்கு, அம்மாவிடம் பெண்ணாப் பிறந்தவள் என்ற என் நிலையை உறுதியாக்க நான் பண்ணினது மன்னிக்க முடியாத தப்புன்னு சொல்லி, பெரிய மனிதத்தன்மையாக ஒரு பத்தாயிரம் ரூபாய் ‘செக்’கையும் கொடுத்து அனுப்பியிருந்தான். நான் செக்கை வீசி எறிஞ்சேன்...’

ரத்னா மெளனமாக இருக்கிறாள்.

‘ஸ்ர்ட்டிஃபிகேட் எல்லாம் வந்துடுத்து. என் சேலைகளைக் குடுத்து அனுப்பி இருக்கிறார்கள்...நகைகளைத் தான் கழட்டி முன்பே வைத்து விட்டேன்...’

‘போ, ரத்னா, முகம் கழுவிட்டு வா, டீ வந்துடுத்து...’

ரத்னா எழுந்து செல்கிறாள்.

கிரிஜா தான்படுத்த படுக்கையை ஒழுங்காக்கி, அறையைப் பெருக்குகிறாள்.

மணி ஏழரைக்கு மேலாகியிருக்க வேண்டும். தெருவில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் அணி அணயாகத் தென்படுகின்றனர்.

கவிதாவைப் போலவே பருமனாக ஒரு பெண் நீலம் வெள்ளைச் சீருடையில் போகிறாள்...

பார்த்துக்கொண்டே நிற்கிறாள். கனவு கூர்முள்ளாக வருத்துகிறது. கவிதா ருனோவைப்போல் போகக்கூடும். வாய்ப்புக்கள் உள்ளன. குமரப்பருவம்... வீட்டுக் கண்டிப்பு. அம்மா கெட்டவள் என்ற உருவேற்றல்கள்...

‘கிரி, என்ன பார்க்கறிங்க? டீ ஆறிப்போயிட்டுது...’, அவள் உள்ளே வருகிறாள். தேநீரைப் பருகுகிறாள். ரத்னா கைப்பையிலிருந்து ஒரு பாக்கெட்டை எடுக்கிறாள். சந்தனத் தூள்... சுகந்த சந்தனத்துள்...கோபுர வடிவிலான வில்லை ஒன்றைக் கிளிஞ்சல் போன்ற அந்தக் கிண்ணத்தில் வைக்