பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சுழலில் மிதக்கும் தீபங்கள்

கொண்டு சாப்பிடுவதை மாமியார் எழுந்து வந்து பார்த்து விடுவாளோ என்ற குற்ற உணர்வு முள்ளாகப் பிடுங்குகிறது.

ரத்னா ஒரு கையால் தட்டைப் பிடித்துக்கொண்டு சோற்றைத் துவையலுடன் கலந்துகொண்டு, அதே கையினால் சாம்பாரையும் எடுத்து ஊற்றிக் கொள்கிறாள். ரசித்துச் சாப்பிடுகிறாள்.

“இப்படிச் சாப்பிட்டு... வருஷங்கள் இருக்கும்...ரொம்ப நல்ல காம்பினேஷன் இந்த சாம்பாரும் துவையலும்!”

பாராட்டுக்களை அள்ளிச் சொரிகிறாள். கிரி தனது சாப்பாட்டை ஐந்தே நிமிடங்களில் முடித்துக் கொள்கிறாள். ஆனால் அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு, கபட மற்ற அவள் தன்மையினால் கவரப்பட்டவளாக அமர்ந்திருக் கிறாள், வாழ்க்கையை நேராக நின்று அறை கூவல்களைச் சமாளிக்கும் துணிவு அவளிடம் இருக்கிறது. தான் மட்டும் ஏணிப்படி அஞ்சிக் குறுகிக் கூனிப் போக வேண்டும்...?

தட்டைச் சுந்தமாகத் துடைத்துவிட்டுக் கை விரல்களை யும் நாக்கால் நக்கிக் கொண்டு ரசிக்கிறாள் ரத்னா.

“கொஞ்சம் தயிரும் சாதமும் போடட்டுமா?”

“ஒ...நோ...வயிறு ஃபுல் கிரி. இனிமேல் இடமில்லை...”

“பாயசம் சாப்பிடு...?”

“ஓ!, அது வேற இருக்கா? சரி கிண்ணத்தில் கொஞ்சமாக விடுங்க!”

கிரியும் சிறிது கிண்ணத்தில் ஊற்றிக் கொள்கிறாள்.

நெள... டெல் மீ கிரி, உங்க அறிவு, உங்க திறமை எல்லாம் இந்தச் சமையலறைச் சேவகத்தில் முடங்கி இருக்கே. கிரி, ஆர் யூ ஹேப்பி வித் திஸ் லைஃப்?”