பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

35


“தலையிட்டுத்தான் ஆகனும் கிரி ஆன்டி. நீங்க தனி மனுஷி இல்லை. ஒரு மொத்த சமுதாயத்தின் அங்கம். அறிவுப் படிப்புப் படிச்சு, கற்பிக்கத் தெரிஞ்சவங்க. உங்க அறிவு, திறமை, எல்லாம் இப்படி முட்டாள்தன மடிக்கூட்டில் பலியாகணுமா? மனுஷருக்கு மனுஷர் வேற்றுமை காட்டும் இது நிச்சயமா தருமமும் இல்லை, மண்ணும் இல்லை. தன்னையே எப்போதும் உயர்த்திப் பிடிச்சுகிட்டு மத்தவங்களைக் காலில் தேய்க்கும் கருவம் இது. ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணே விரோதியாகும் முட்டாள்தனம்!”

“நீ இப்படி இரண்டு நாள் வந்து எதையானும் சொல்லி விட்டுப்போ, நாளைக்கு உன் சித்தப்பா வந்தால், அவருக்கு அவம்மாவை எதிரிடுவதே பிடிக்காது!”

“அவர் வரட்டும். அப்ப நான் சொல்றேன். நீங்க வாங்க. அபு உங்ககிட்ட பேசனும்னிருக்கிறார். அவர் பிராது. என்ன தெரியுமா? உங்களைப்போல் படிச்சிட்டு, அந்த அறிவு எதுக்கும் பயனாகாம சமூத்திலே முடங்கிப்போற சக்திகளைப் பத்தி ஸ்டடி. பண்றது. நமக்கு இப்ப தேவையான ஆராய்ச்சி...”

கிரிக்கு மலை உச்சியின் விளிம்புக்குப்போவது போல் தானிருக்கிறது.

சற்றைக்கெல்லாம் காபியை எடுத்துக்கொண்டு போகிறாள்.

அபு எழுந்து ஒரு பணிவுடன் காபிக் கிண்ணத்தை எடுத்துக் கொள்கிறான்.

“உக்காருங்க ஆண்டி!” ரத்னா கையைப் பற்றி கோபாவில் உட்காரச் செய்கிறாள். மேலே படிக விளக்கு வெளியேயிருந்து திரையினுள்டே வரும் மாலைநேர ஒளியில் மின்னுகிறது. அறையின் நேர்த்தியான இளம் நீலமும் பச்சையும் தெரியும் பூங்கோலம் ஒட்டிய சுவர்களும், பதித்த அலமாரியின்