பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

65


‘டிச்சர்...? நீங்க கிரிஜா டீச்சரில்லே?...’

திடுக்கிட்டாற் போல கிரிஜா திரும்புகிறாள். கூப்பிட்ட இளைஞன், வற்றி மெலிந்த உடலில் முப்புரி நூல் ஒட்டாம லிருக்க ஒற்றைச் சுற்று வேட்டியுடன் காட்சியளிக்கிறான். கருவலான உடல்வாகு. மொட்டையான தலையின் உச்சியில் வட இந்தியச் சமயாசாரச் சின்னமான இரண்டொரு முடி நீட்டிக் கொண்டிருக்கிறது.

‘யாரப்பா..? எனக்குப் புரியலியே?...’

‘நீங்க கிரிஜா டீச்சர் தானே?’

‘ஆமாம்.?’

‘நான்தான் டீச்சர், தருமராஜன், நீங்க தருமம்னு கூப்பிடுவேள்... சாவித்திரி மாமி பிள்ளை... நினைப்பில்லையா...?’

‘ஒ...!’

அவனுடைய தாய் நினைவில் வருகிறாள். வரிசையாக எட்டுக் குழந்தைகளுக்குத் தாய். புரோகிதப் பரம்பரையில் வந்து, ‘சரஸ்வதி’யின் பார்வையை எந்த வகையிலும் பெறாமல், வெறும் தீனிப் பட்டறையாக வயிறு வளர்த்து, அதன் காரணமாக நோயிலே வீழ்ந்த தந்தை. அவனுடன் எட்டுக் குழந்தைகளையும் காப்பாற்ற, கல்லுரலைக் கட்டி இழுத்து, அப்பளக் குழவியை ஒட்டி, இரும்புலக்கை பிடித்து, தன்னைக் கரைத்துக் கொண்டிருந்த அந்த அன்னை-கிரிஜாவுக்கு அவ்வப்போது வந்து உதவுவாள். இந்தத் தருமனுக்கும் இவன் சகோதரி விமலுவுக்கும் கல்வி பயிற்றும் பொறுப்பை அவள் ஏற்றிருந்தாள்.

விமலு தட்டிமுட்டி ஒன்பது வரை தேறி வந்தாள். இவன் ஏழையே தாண்டவில்லை.

‘அம்மா செத்துப் போயிட்டா டீச்சர். அப்பாவும் அப்பவே போயிட்டார். நாணா கல்யாணம் பண்ணிண்டு பங்களூர்