பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

சுழலில் மிதக்கும் தீபங்கள்


போயிட்டான். விமலுதான் கான்வெண்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. சிவகாமி, சச்சு, ராஜூ எல்லாரும் ஊரில் இருக்கா, நான் இப்படி ஸ்வாமிகளோட வந்துட்டேன்...’

‘...இங்க நீ என்ன பண்ணுவே? வெறும சாப்பாடு போடுவாளா?’

‘இல்ல உச்சர், எடுபிடியா ஏவிய காரியமெல்லாம் செய்யனும்...நீங்க டில்லிலேந்து வந்திருக்கேளா டீச்சர்...?’

‘ஆமாம்...’

‘நீங்க ஸ்வாமிகளக் கிட்டப் பார்த்துப் பேசினேளா டிச்சர்...?’

அவள் தண்ணிரைப் பார்க்கிறாள். இந்த சத்தியங்களுக் கப்பால் எந்த நினைப்பும் எனக்கு இல்லை என்பதை எப்படிச் சொல்வது?

‘நீங்க வாங்க டீச்சர். நான் கிட்டக் கூட்டிட்டுப் போய்த் தரிசனம் பண்ணி வைக்கிறேன்...’

தன்னாலும் அவளுக்கு ஏதேனும் செய்ய முடியும் என்ற ஆர்வம், அவன் முகத்தில் ஒளிவிடுகிறது.

‘இருக்கட்டும்பா, சந்தோஷம். நான் வரப்ப சொல்றேன்...’

‘...நான்...அதோ, அந்தக் கட்டிடத்தின் முன்புற ரூமில் தான் அநேகமா இருப்பேன்...பூஜையின்போது வாங்கோ டீச்சர்...!’

வாழ்க்கை எந்தெந்த வகைகளில் மனிதர்களைத் திசை திருப்புகின்றன! இந்தப் பையனின் மனித நம்பிக்கையை மதிப்பதற்காகவேனும் அவள் அவன் சொல்லும் பூஜைக்குப் போகவேண்டும்!