பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

81


மேலெழுந்தவாரியா பார்த்தால் ஒரு குறைவும் இல்லை. ஆனா...நான் அப்ப ஒரு சின்ன ஊரில நானாக ஒரு வேலை செய்து கொண்டு இருந்தபோது இருக்கும் ஒரு நிறைவு இதில் இல்லை. உங்களைப் பார்க்கிறப்ப, நீங்களே, என்னை வந்து பசியோட இருக்கே, சாப்பிடுன்னு சொல்வது எப்படி இயற்கையாகத் தோணித்தோ, அப்படி இதையும் சொல்லலாம்னு எனக்குத் தோணுது...பாட்டி, நீங்க எப்படி இந்தக் கரையில் வந்து ஒதுங்கினர்கள்? நம்மில் ஒராண் இப்படி குடும்பம் வேண்டாம்னு வந்துட முடியும். குடும்பம்ங்கறது அவனை எப்பவுமே பாதிக்கறதில்ல. அவன் செளகரியத் துக்காகத்தான் மனைவி, பிள்ளை, குட்டி, எல்லாம். அவர் அவன் செளகரியத்துக்கு இல்லேன்னா, உதறிடலாம். ஆனா. பெண்ணால அப்படி உதற முடியுமா? சொல்லுங்கோ, பாட்டி!’

“நீ சொல்றது சரிதான். ஆனா....சில சந்தர்ப்பங்கள் அப்படி ஒதுக்கிடும்மா. இங்கெல்லாம் கங்கையில் தீப ஆரத்தி எடுப்பாளே, அப்ப நான் குழந்தையாய் வேடிக்கை பார்ப்பேன். நடு ஒட்டத்திலேருந்து எப்படியோ கரையில வந்து மோதும் ஒவ்வொரு தீபம் சில சமயம், நம்மைப் போலன்னு அந்தக் காலத்தில் நினைச்சிப்பேன். எங்க பிறந்த வீடு நாகப்பட்டினத்துங்கிட்ட ரொம்ப ஏழை. நாங்க ஏழெட்டுப் பேர். நான் அஞ்சாவது பொண். என்ன செய்வா? மதுரைப் பக்கத்திலேருந்து வந்து மூணாந்தாரம்னு கேட்டா, கல்யாணமாயிட்டது. அப்ப ஒண்ணும் உலகமே தெரியாது. இங்கே வந்தால் மூத்தாள் பிள்ளைகள் ரெண்டு பேருக்குக் கல்யாணமாயிருக்கு. பெரிய குடும்பம். எங்க வீட்டில வயிற்றுக்கில்லைன்னாலும் ஒரு சுதந்தரம் உண்டு. எம்பாட்டுக்கு ஆற்றில் குளத்தில் குளிப்பேன், கோயிலுக்குப் போவேன். யாரானும் ஏதானும் வேலை சொன்னால் செய்வேன். இங்கே வாடி, போடின்னு அந்த மூத்தாள் பிள்ளை அதட்டுவான்...ஒண்ணும் சொல்லிக்கிறாப்பல இல்ல. அதோட, அவன் நடத்தை வேற எனக்குப் பயமாகிவிட்டது. புருஷரோ, கல்யாணம்னு பண்ணிண்டாரே