பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

சுழலில் மிதக்கும் தீபங்கள்


தலையைக் கோலம்பண்ணி,மூலையில் வச்சுக் குலைக்கணும்னு . நினைச்சான். ஏன்னா, அவன் இஷ்டத்துக்கு நான் வளையல இல்லையா?...ஊரில் போய் என்னென்ன கதை கட்டினானோ? அதெல்லாம் என் காதிலவிழல...பெரிய ஸ்வாமி... நீ உக்காந்து இருந்தியே அங்கதான் நான் முதல்ல பார்க்கிறப்ப உட்கார்ந்திருந்தார். பெண்களை இப்படிப் பண்றது மகாபாவம். அதுக்கு எந்த சாஸ்திரத்திலும் உண்மையாக ஒப்புதல் கிடை யாது. சாஸ்திரம்ன்னு இவங்க சொல்றதெல்லாம் மனுஷன் பண்ணினது தானேம் பார். இவா ஆசிரமத்தில் நிறைய, பெண்கள் வந்து இந்த மாதிரி சேவைபண்ணத் துறவறம் வாங்கிட்டிருக்கா. ஆனால் நாந்தான் முதல். இந்த பிரும்மசாரி சொன்னேனே? அவர் ஆயுர்வேதம் படிச்சவர். மூலிகைகள் கொண்டு வந்து மருந்தெல்லாம் தயாரிப்பார். நானும் அவரும் இங்க சுத்தி இருக்கும் கிராமமெல்லாம் கால் நடையாவே போவோம். அநுபவத்தில் பலதும் கத்துண்டேன்.காச்சல், சொறி, சிரங்கு, பிரசவம், கண்வலி, காதுவலின்னு பார்க்கவும் மருந்து போடவும், பழகினப்ப ஜன்மாவில இதுக்கு மேல என்ன வேணும்னு தோணும். ராத்திரில பனிக்குளிரில், கணப்பைப் போட்டுண்டு இப்படீ உட்கார்ந்திருப்பேன். அவரை பிஷக்பாபான்னும் என்னை மாதாஜின்னும் சொல்லுவா, ஆசிரமத்துக்குப் பணக்காரர் ஏழை எல்லாரும் வருவா. இப்பப் போல, காரிலும் பஸ்ஸிலும் வந்து பாத்துட்டுப் போறதுக்கில்லாம, தங்கி அந்த அமைதியை அனுபவிக்க வருவா...’

‘இப்ப அந்த பிஷக் பாபா இல்லையா?...’

‘காலமாயிட்டார். எட்டு வருஷமாயிட்டது. இப்ப எங்கிட்ட மருந்து கேட்க வரா ஒண்னுரெண்டு கிராமத்துக்காரா. அவர்போனப்புரம் ஒண்ணு ரெண்டு வருஷம் அதை இதை நினைவு படுத்திண்டு எப்பவானும் யாரானும் கேட்டாச் சொல்லுவேன். இப்பதா மூலைக்கு மூலை டாக்டர் போர்டு இருக்கே?...’

‘நீங்க அப்புறம் தெற்கே போகவேயில்லையா?’