பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

91


மாதாஜி என்ற சொல்லுக்குரியவள் தான்தான் என்று புரிந்ததும் சட்டென்று பார்க்கிறாள். புதிய மண் கிண்ணத் தில் ஆவி பறக்கும் தேநீரை நீட்டுகிறான்.

‘கித்னா..?’

‘ஸாட்... பைசே’...அறுபது பைசாவைக் கொடுத்துவிட்டு தேநீரை அங்கேயே ருசித்துப் பருகுகிறாள். நிறையச் சர்க்கரை போட்டிருக்கிறான்.

பாலங்கடந்து அப்பால் கங்கைக் கரையின் பக்கம் அமர்ந்து மாலை முழுவதையும் கழிக்கிறாள். மாலை மங்கி தீபங்கள் சுடர்பொரிய கங்கைக்கரை விழாக்கோலம் கொள்கிறது. எழுந்து வருகிறாள்.

‘...அடிம்மா? இன்னிக்கு முழுக்க எங்க போயிட்டே?... காலம வந்தாளே, அவா வாதபூஜை பண்ணா. பிட்சை பண்ணா. வகை வகையா எல்லாம் பண்ணிச் செலவழிச்சிருக்கா, எங்கிட்ட வந்து காலம உங்ககிட்ட நின்னுண்டிருந்தாளே ஒரு பொண்ணு, அவ எங்கேன்னு கேட்டா... தெரியுமே இங்கதா எங்ககூட தாஇருக்கான்னேன். ‘தெரியுமா உங்களுக்கு அவளை...!ன்னு கேட்டதுக்கு, ரொம்பப் பழக்கம் அசப்பில அவளாட்டம் இருந்தது. மறுபடி பார்த்துப் பேசறதுக்குள்ள போயிட்டா. பூஜையிலேயும் காணலை... ன்னா... இன்னொன்று கேட்டியாம்மா? இவருக்கு, அவா ஏதோ துரத்து உறவாம். பேசிண்டே இருக்கச்சே பூதப் பாடின்னு சொன்னா. யாரு, எவா, எங்க அம்மான் வழிப் பாட்டனார் ஊராச்சேன்னு விசாரிச்சால், அவர், இவருடைய மாமாவுக்கு மச்சினனின் அத்தானாம். உறவு கிடக்கட்டும், ஒட்டி ஒட்டிண்டு துளி கருவமில்லாமல் அவளே பந்தி விசாரிச்சு, அவ்வளவு நேர்த்தியா எல்லாம் பண்ணினா இப்பத்தான் காரில் போறா. ராத்திரி யாரோ வெளிநாட்டுக்கார்ன் வரானாம். டில்லில இருக்கணுமாம்...

கெளரி அம்மாள் வாயோயாமல் ரோஜாமாமியைப் புகழுகிறாள். வயிரங்களும் பட்டும். காரும், மினுக்கான பேச்சும்,