பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 13

என்ருெரு புலவர் பாடி யிருப்பினும்,

அந்தணர்க் காகவோ, அரசர்க் காகவோ,

பத்தினிக் காகவோ, பரத்தையர்க் காகவோ வானம் தனிமழை வழங்குவ தில்லை !

பருவமழை பொய்த்தால் பஞ்சம் வந்திடும். பஞ்சம் வந்திடின் பட்டினி பரவும்.

செத்தும் கொடுத்த சீதக் காதி வள்ளல் என்ப்ான் வாழ்ந்த நாளில், கார்தட்டுப் பட்டதாம் ! கார்தட்டுப் பட்டதால் ஓர் தட்டில் பொன்னும் ஓர் தட்டில் நெல்லும் ஒக்க விற்றதாம் ஒவ்வோர் ஊரிலும் !

எடுப்பதைக் காட்டினும் கொடுப்பது நல்லது. காய்வதைக் காட்டினும் கனவது நல்லது.

மழையில் தென்னை மரங்கள்நனையலாம் : மலையும் நனையலாம் ;சிலையும் நனையலாம் ; காடும் நனையலாம் ; வீடும் நனையலாம்.

கண்ணிரில் அடிக்கடி நனைவதைக் காட்டினும்

மங்கை ஒருத்தி மழையில் கனையலாம்.

கைவண்டி இழுக்கும் கந்தனே முனியனே

குப்பனே அன்னவன் அப்பனே நனைந்தால், நனைந்த செய்தி நாளேட்டில் வருமா ?