பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:

இட்டிலி சுடுபவள் எட்டெலி வளர்ப்பதும், முத்திரை நடிகை முயல் வளர்ப்பதும், பொருளா தாரப் பொறுப்பில் லாத்தனம்.

ஆளுங் கட்சியும் அதனெதிர்க் கட்சியும், போன்ற தாகிய பூனையை எலியைக்

குரங்குக் குட்டியைக் குழிமுயல் தன்னைத் தொங்கும் மாவிலைத் தோரணம் போன்று பறந்து செல்லும் பச்சைக் கிளிகளை - வளர்ப்பதால் நமக்கு வரும்பயன் என்ன ?

பெரும்பாலும் இன்று பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பால் இன்றித் தவிப்பதைப் பார்க்கிறோம்,

தாய்ப்பால் இன்றித் தவிக்கும் குழந்தைக்கு நாய்ப்பால் உதவுமா? நலிவுற்ற குழந்தை பசும்பால் இருந்தால் பருகு மல்லவா? பசுவை வளர்த்தால் பயனுண் டல்லவா?

ஆடு வளர்ப்பதும் மாடு வளர்ப்பதும் அவரவர் விருப்பமே ஆயினும் நடிகையர் இருநூ ரெலிகளை வளர்ப்பதால் என்பயன்?

ஒருபசு வளர்ப்பினும் உபயோகம் உண்டே !