பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

அமெரிக்க நடிகையாம் ஆர்லின் டாலின்

எச்சில் உதட்டிலோர் மச்சம் உள்ளதாம்!

அறிமுக மான துறைமுகம் போன்ற பாரதி என்னும் பால்நிலா நடிகையின் மார்பின் மீதிலோர் மச்சம் உள்ளதாம்!

மேனாட்டு நடிகைக்கு மேலே மச்சமாம்! கீழ்நாட்டு நடிகைக்குக் கீழே மச்சமாம்!

மச்ச மிருந்தென்ன? மங்கையர் கெல்லாம் அச்சமும் நாணமும் அல்லவா வேண்டும்?

நாணத்தைக் காட்டெனில் ஏனத்தைக் காட்டும் நங்கையர் இடத்திலோ, நடிகையர் இடத்திலோ, கதைக்குத வாத கவர்ச்சியைத் தவிர இவற்றை நாமெதிர் பார்ப்பதற் கில்லையே!