பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

முத்தம் கொடுக்கும் அத்தான் வராததால்,

அத்திப் பழம்போல் குதிகால் அமைந்தவள் அப்பழம் குழைதல்போல் ஆகிவிட் டாளாம்

பாதத் திற்கும் பரிதாபத் திற்கும், உவமை கூறிட உதவும். ஒரேபழம், அத்திப் பழந்தான். அந்தப் பழமோ புண்ணில் லாமலே புழுக்க வல்லது! சூடு தணியவும், இரத்தம் சுரக்கவும், தித்திக்கும் அத்தியைத் தின்றால் நல்லது.

அத்திப் பாலினால் பித்தம் பறக்குமாம். அத்தி மரத்தின் அடிவேரில் இறங்கிய கள்ளில் சர்க்கரை கலந்துநாம் உண்டால், வெப்பமும் மேக வெட்டையும் நீங்குமாம்.

உத்தரவுக் கடங்கா உதிரப் பெருக்கும், அதிசீத பேதியும் ஆசனக் கடுப்பும், அத்திப் பட்டையின் மூலம் அகலுமாம்.

ராத்திரிக் குதவும் பூத்திரி நடிகையாம் ராஜஸ்ரீ என்னும் ரஞ்சித மணிக்குப் பழுத்த வாழைப் பழங்களைக் காட்டினும், அத்திப் பழங்களே அதிகம் பிடிக்குமாம்.

அத்திப் பழத்தினால் அநேக நோய்கள் தீர்ந்து விடுமெனத் தெரிவதால் அப்பழம் வேறு சிலரின் வேதனை தீரவும், பளபளப் பான பட்டு ரவிக்கை மேடு சரிந்த நடிகையின் மெல்லுடற் சூடு தணியவும் மிகமிகத் தேவையே!