பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

si

இலக்கண விளக்கம் எனும்நூல் எழுதிய நாவலர் போன்றும் நாட்டார் போன்றும், சங்க நூற்களைச் சரியாய்க் கற்கவோ, . தாடைவலி யெடுக்கப் பாடஞ் சொல்லவோ, இத்தமிழ் நாட்டில் இன்று யாருளார்?

அந்தக் காலமோ செந்தமிழ் இலக்கிய கல்வியின் ஆழம் பார்த்திட்ட காலம். இந்தக் காலமோ இறுகத் தழுவிக்'

கலவியின் ஆழம் பார்க்கின்ற காலம்.

காவல் வேண்டுமா ? நற்றிணை வேண்டுமா ? இரண்டில் உனக்கிங் கெதுவேண்டும் சொல்லெனில் நற்றிணை எதற்கு ?. நளவெண்பா எதற்கு? நன்னூல் எதற்கு? நானாற்ப தெதற்கு ? நண்பரே எனக்கு நாவல்தான் வேண்டும் என்பவர் தொகையே இன்றைக் கதிகம்.

முத்தமிழ் நாட்டில் முதன்முத லாகத் தூய வேத நாயகம் பிள்ளையே நவீனம் எனப்படும் நாவல் எழுதினார்.

அவருக்குப் பின்னரோர் ஜயர் எழுதினர். மரண மடையும் வரையிலே பிறரிடம் சரண மடையாத சரவணப் பிள்ளையும், வேதிய ராகிய மாதவை யாவும், படிப்பிற் சிறந்த பரிதிமாற் கலைஞரும் இலக்கியச் சுவையொடு நாவல்கள் எழுதினர்.

இப்படி இவர்கள் எழுதி வருகையில், ஆரணி யாரும் வடுவூ ராரும் எழுதத் தொடங்கினர். இந்நாட்டில் அவர்களால் துப்பறியும் கதைகள் தோன்ற லாயின.

மாற்றாரை மதிக்கும் மனப்பான்மை கொண்டு கல்கி அவர்களே கவனத்தை ஈர்க்கும்