பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் சண்முகம் அவர்கள், நான் ஒரு சுவடியையோ நூலையோ தேர்ந்து பல தொகுதிகள் வருமாறு விரிவுரை எழுதி பதிப்பிக்கவேண்டும் என்று விரும்பினார். நான் பல நூல்களையும் சுவடிகளையும் பார்த்து சூடாமணி -யைத் தேர்ந்தெடுத்தேன். சில சுவடிகள் இருந்தன. அவற்றுள் நிறைவானதும் சீரானதுமாகிய சுவடியையும் ஒரு நூலையும் ஒப்பிட்டு முலமாகக் கொண்டேன். கல்கத்தா சுவடிப்புலத்திலிருந்து சில குறிப்புகளைப் பெற்றேன். சென்னை அரசு நூலகச்சுவடி, செட்டிநாட்டு திரு முத்தையா அவர்கள் நூலகச் சுவடி, மயிலம் சைவத் திருமடத்துச் சுவடி, கோவை-திருப்பேருர் சாந்தலிங்க அடிகளார் சைவத் திருமடத்துச் சுவடி ஆகியவற்றையும் பார்த்து திருந்திய முலத்தைக் கொண்டேன். விரிவுரையை அகலவுரையாக முன் கண்டவாறு எழுதினேன். தமிழ்மொழிச் சிறப்பும் சொற்சிறப்பும் வெளிப்படுமாறு ஒரு விரிவான ஆராய்வுரை வேண்டுமென்று இயக்குநர் குறித்ததால் அவ்வாறே ஆராய்வுரை எழுதப்பட்டது. இவ்வாறு இந்நூல் விரிந்த ஆராய்வுரை, அகல விரிவுரை என அமைகின்றது. இந்நூலில் முதல் இரண்டு தொகுதிகளே உள்ளன. எஞ்சிய பத்துத் தொகுதிகளும் அகல விரிவுரையுடன் வருமானால் மேலும் நான்கு மடலங்கள் வரும். ஆக ஐந்து மடலங்களில் ஏறத்தாழ 2,500 பக்கங்களில் இது முடியும், நிறை வுறும் இந்நூல் தமிழுக்கு ஒரு சொற்களஞ்சியமாக அமையும். -ళ్ఫిన్స్ట్రాక్ష