பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குரங்கு திணைக்கதிரைக் கை விரல்களால் நெரித்துத் தினையைக் கைநிறையக் கொண்டது. இதனை,

அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு -என்று நற்றிணை (22-4) காட்டியது.

'வயங்கு வெயில் ஞெமியப் பாய்-என்று அகநானூற்றில் (322-1) 'நெரிந்து கலைய’ என்னும் பொருளில் ஞெமிய என்று 'ளுெம் வேரைச் சுட்டி நிற்கிறது.

பின்னர் ஞகரம் நகரமாகி 'நெமிடு-நிமிடு’ ஆகியது. இதனைக் கொங்குவேளிர், 'துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி’ (நெருடி)" என்று பாடினார்.

இந்த நிமிடு அம் கூடி (நிமிடு-அம்) நிமிடம் ஆயிற்று. நிமிடம் இசைத்துறையில் தாளத்தின் காலவகை பத்தில் ஒரு கூறு எனப்படும்.

இதனை,

'கணவலங் காட்டை நிமிடம் துடிகொண்டு' என்று அரபத்தநாவலர் காட்டியுள்ளார். வழக்கிலும் நிமிடல், நிமிட்டலாக உள்ளது. கைக் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் முனைகளால் இணைத்து அழுத்தி நெரிப்பது 'நிமிட்டல்' எனப்படும். குழந்தையின் துடுக்கடக்க அதன் தொடையில் இவ் வாறு நெரிப்பர். அதனால் தொடை சிவந்து தடித்துப் பழம்போல் தோன்று வதை ‘நிமிட்டாம்பழம்' என்று நயமாகச் சொல்லினர்.

மேலும் நிமிடம் என்பதின் நேர நுட்பத்தைக்கொண்டு காலத்தைக் கணித்து வருவது கூறுவதற்கு நிமிடம்-நிமிட்டம்-நிமித்தம்-நிமித்திகம் வந்தது. நிமித்திகம் கூறுவோன் நிமித்திகன் எனப்பட்டான்.

வடமொழியாகச் சொல்லப்படும் நிமிஷம் தமிழ் நிமிடம் போன்று மூல வேர்ச்சொல் கொண்டு எழுந்ததன்று. அதற்கு மூலம் ஒரு கதை, அறிவிற்குப் பொருந்தாத கதை:

நிமி என்றொரு மன்னன். அவனுக்கும் கெளசிக முனிவர்க்கும் நேர்ந்த பூசலில் ஒருவருக்கொருவர் சலித்துக்கொண்டனர். அதன்படி நிமி காற்றுருக் கொள்ள நேர்ந்தது. அவன் தேவர்களிடம் வரம் பெற்று அனைத்து உயிர்க

80 கொங்குவேளிர்: பெருங்-உஞ்சை-23-33, 92 81. அரபத்த நாவலர்: பரத சாத்திரம்-தாள் 27

90