பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்-அ (வல்லினம்) ம்-இ (மெல்லினம்) ழ் (இடையினம்) மெ. யெழுத்தின் மூவினம் கொண்டதால் தமிழ். இஃதும் இயல்பில் அமைந்ததைப் பயன்படுத்திக் கொள்வதே. 'தமில்-தமிள்-தமிழ் ஆயிற்று' என்பது மாகறல் கார்த்திகேய கருத்து. தமி-ழ் (தன்னிடம் மட்டும் தனியாக 'ழ்' கொண்டது-தமி-தனி) இராமலிங்க அடிகளார் ஆன்மிகப் பாங்கில், 'த் என்பது சிவருப இயற்கையுண்மைக் கட்டளை, 'அ'-இயற்கை யுண்மைப் பரிபூரணப் பொருளிலக்கரம்; 'ம்' ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம்; இ-சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம் 'ழ்'-இந்தச் சிறப்பியல் அக்கரம் தனித்தகைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்' என்று விளக்கியுள்ளார். தமி-ழ் (தமி-தனி-ழ் விகுதி) தனித்தகவு கொண்டது. இது பாவாணர் விளக்கம். இதற்குப் பாவாணர் அமி, இமி, உமி, குமி சிமி என்னும் ஏவற்பொருள் முதனிலைகள் 'ழ்' என்னும் விகுதி பெற்று முறையே அமிழ், இமிழ், உமிழ், குமிழ். சிமிழ் என ஆனமை போன்று 'தமிழ் என்னும் சொல் இம்மொழிக்குப் பெய ராயிற்று என்று காட்டியுள்ளார். இது பொருந்துவதாக உள்ளது; ஏற்கலாம். 'தமி' என்னும் முதனிலை தம் என்னும் உரிமைச் சொல்லின் வளர்ச்சி, தனித்தன்மை, தனித்தகுதி என்று பொருள்படும். சிறப்பெழுத்தாகிய 'ழ் விகுதியாக அமைய, தமிழ் என்று அமைந்து 'தனித் தகவுடைய மொழி என்று பொருள்படும். உலக முதன் மொழி என்னும் அளவில் முன்னே காணப்பெற்றவை அனைத்தும்- அதற்கு மேலும்-தமிழின் தனித் தகவுகளே. மேலைத் தொன்மை மொழிகளுடன் தமிழை ஆராய்ந்த மொழியறிஞர் கே. சி. ஞானகிரியார் 'தனித்தன்மை, தனி ஒன்று சரிநிகர் அல்லது ஒப்புப்பெறாதது. இணையற்றது எனப் பொருள்தரும் தமி (Tami) என்அ' 88. மாகறல் கார்த்திகேய முதலியார்: மொழி نه به & H. 4ே ஞா. தேவநேயப் பாவாணர்: திராவிடத்தாய் 5 qả