பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதல்) முக்கால், விடுத்தல் (தொண்டை வழியே வெளிப்படுத்தல்) ஒன்று என்று பகுத்துக்காட்டியதும் ஒரு துணுக்கமே. இந்த ஒலி வடிவ எழுத்தை முந்தைய ஆசிரியர் ஒருவர் இரண்டு நி,ை ளாகக் கண்டார். ஒலி அணுக்களின் திரட்சி செவிப்படும் அளவில் ஒலியா, வருவதை ஒலியெழுத்து என்று, " இசைப்படு புள்ளின் எழா அல் போல செவிப்புல னாவது ஒலியெழுத் தாகும் ” என்றும் அவ்வொலி வெவ்வேறு எழுத்தொலியாய் அமைவதைத் தன்மை எழுத்து என்று 4 & • • • 95959 ೧೨ಘ மிடற்றுப் பிறந்திசைப்பது தன்மை எழுத்தே' என்றும் பெயரிட்டு விளக்கியுள்ளார். இவ்வாறு ஒலி எழுத்தாக உருப்பெற்றுப் பல்வகை எழுத்துக்களாகப் பலுக்கப் பெற்றபின் அவற்றை முறைப்படுத்தி நெடுங்கணக்காக அமைத் துள்ளமை படிமுறை வளர்ச்சி யறிந்து செய்யப் பெற்றதாகும். இக்காலத்தில் நாம் எழுதும் எழுத்துருவங்கள் ஏறத்தாழ 300 ஆண்டு களுக்கு முன்னர் உருச் செப்பம் செய்யப்பெற்றவை. தமிழில் முதன்முதலில் வடிவ எழுத்து தோன்றியதற்கும் இக்காலத்திற்கும் இடையில் பல்லாயிரம் ஆண்டுகள் நகர்ந்துவிட்டன. இப்பல்லாயிரம் ஆண்டுகளும் மாந்தரின் வாழ் வில் ஒரு நீண்ட் ஆழமான வரலாறாகும். இவ்வரலாற்றின் தோற்றக்காலம் கணிக்க இயலாததாகும். ஓரளவான எல்லையாக, குமரிக் கோடுங் கடலால் கொள்ளப்பட்ட காலத்தின் மிக மிக முந்தியது என்று குறிக்கலாம். உலக மொழிகள் பலப்பலவாய்ப் பல்கியுள்ளன. அவற்றுள் மிகத் தொன்மை வாய்ந்த தேர்ந்த மொழிகள் சிலவ்ே, அவை ஒரு கைவிரல் எண்ணிக்கையில் அடங்கிவிடும். அவற்றுள்ளும் தொன்மையானவை தமிழ் வடமொழியாம் மறைமொழி. எபிரேயம், சீனம் ஆகும். இவற்றுள்ளும் பிற உலக மொழிகளுள்ளும் சொற்களில் ஒற்றுமை தென்படும். ஆனால் எழுத்தில் ஒன்றி நில்லா வேறுபாடுகளே உள்ளன். - - 惑斑 ,黎喂领 爱。现够 யாப்பருங்கல விருத்தி-96 உரை மேற்கோள் 98.