பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் பொறிகளுக்கும் ജൂൺങ്ങി. அவையெல்லாம் உயர்த்திணைக்குரிய செயல் களைச் செய்யுமாயினும் அஃறிணைதான். அறிவியலாரும் முடிவாக அவ்வாறு தான் கொள்கின் றனர். மாந்தன் உருவாக்கியவற்றில் சொல்லும் சொல்லால் ஆகிய மொழியும் தனிச் சிறப்புடையவை. அச்சொல் புல்வகையான - பொருள்களைத் தரும் என்றாலும் அதன் பாகுபாட்டையும் இணைத்துத தொல்காப்பியர், ' சொல்லெனப் படுவது பெயரே வினையென்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே $ 3 என்றார். ஆகச் சொல்லை பெயர் வினையென் றுதான் முதலில் பிரித்தார். அவை இரண்டிலும் 'பெயரே என்று பெயருக்கு மட்டும் ஏகாரம் குறித்தார், வினையை வினை' என்றுதான் குறித்தார். இவ்வாறு 'அ' இரண்டாக அவையிரண்டாகக் கூறியவரை அறிந்திசினோர் என்றார். அறிந்திசினோர் என்றால் அறிஞர், அறிந்தவர் என த்தான் பொருள்கள். இச்சொல்லில் இசின் என்றொரு இடைநிலை சேர்ந்து அறிந்திசின் என்றாயிற்று. இதுபோன்றே கண்டிசினோர், உணர்ந்திசினோர் என இரண்டிலும் இசின் இடம்பெற்றது. அறிந்ததை நடைமுறையில் கண்டவர் கண்டிசினோர். கண் டதன் உண்மை நிலையை உள்ளத்தால் உணர்ந்தவர் உணர்ந்திசினோர். இவ்வாறு அறிந்த வரும் கண்டவரும் உணர்ந்தவரும் சொல்லைப் பெயர், வினை என்ற இரண்டைத்தான் சொல்லாகக் குறித்தனர். மேலே கண்ட தொல்காப்பிய நூற்பாவிற்கு அடுத்த நூற்பா, " இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கின் தோன்று மென்ப" என்று இடைச்சொல்லும் உரிச்சொல்லும் தனி மூலங்கள் கொண்டவை அல்ல. பெயர், வினை வழியே தோன்றும் என்ற உண்மையை தனி நூற்பாவார் சொல்லிப் புலப்படுத்தினர். பிற்காலத்திலோ, ' பெயர்வினை இடைஉரி என்ற நான்கே நுவலுங் காலை முறைசிறந்தனவே * > என்று கொள்ளப்புட்து. அதாவது பெயர். ിഞ്ഞ്ചേ മത-, -# ணத்தே பேசப்பட்டன. இருப்பினும் இவை பெயர், விணை அடியா: தான் தோன்றுபவை, முன்னர்க் கூறப்பட்டதுபோல் தனி மூலங்தன: முன்னுள்ள இரண்டு தொல்காப்பிய நூற்பாக்களையும் கூர்ந்து நோக்கின் 104