பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லெனப்படுவ என்று தொடங்கிப் பெயர், வினை என்றுதான் குறித்தார். ஆனால் அடுத்த நூற்பா இடைச்சொற் கிளவியும் என்றும் உரிச்சொற் கிளவி யும் என்றும் இடையோடும் உரியோடும் சொல் சேர்க்கப்பட்டது. இடைச் சொல் உரிச்சொல் எனத்தான் சொல்லவேண்டும். சொல்லைச் சேர்க்காமல் இடை என்றால் இரண்டி ற்கு இடையேயுள்ள எதையும் குறிக்கும். உடம்பின் இடையில் உள்ள உறுப்பையும் இடை என்கின்றோம். இடப்படுவது இடை. எடப்படுவது எடை என்பதைப் போல. சொல்லைக் குறிக்காமல் உரி என்று மட்டும் சொன்னால் தொங்கவிடப்படும் உறியைக் குறிக்கும், உரிமைத் தன்மையின் பகுதியைக் குறிக்கும்.எனவே, இடைச்சொல் என்றும் உரிச்சொல் ஆனால் பெயர், வினையைச் சொல் சேர்த்துச் சொல்ல வேண்டியதில்லை. பெயர் என்றாலே அதற்குரிய சொல் சேர்த்துச் சொல்லவேண்டும். என்றுமே பொருளைக் குறித்துவிடும். வினை என்றாலும் அவ்வாறே. பெயர் என்பது 'பெய்' என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டது. "ஏய்' என்பது உயர் என்று வரும். இது போன்றே வினையும் தன் தொழிற் பொருளைக் குறிக்கும். பெயர் என்பதன் வேர்ச்சொல் 'பெய்' என்றால் வெளிப்படுவது என்று பொருள். விண்ணிலிருந்து வெளிப்படும் பலவற்றில் மழை ஒன்று. அது 'பெய்யெனப் பெய்யும் மழை என்று பெய்வதாகக் குறிக்கப்பட்டது. பெய்வ தால் அஃதே பெயல் என்றும் பெயர்பெற்றது. பெயல் என்றால் 'பெயராக மழையைக் குறிக்கும்-வினையாகப் பெய்வதைக் குறிக்கும். விண் ணிலுள்ள சூரியனிலிருந் துதான் நிலம் முதலிய பல தோன்றின. சூரியனின் ஆவி சிதறி ஆவியாகவே உருண்டை வடிவம்பெற்று அவ்வுருண்டை வடிவம் ஆறிப்போய் நிலமானது. நீர்பெற்றது. மாந்தன் வாழ்வதற்கு ஒரே இடமாகவும் உள்ளது. இவ்வாறு நிலத்தில் வாழ்கின்ற மாந்தன் பெய்யும் மழையைப்போல் அஃதாவது வெளிப்படும் மழையைப் போல் வெளிப்படும் பொருளைப் பெய்து பெயர் என்ற சொல்லை முதலில் அடைந்தது. பின்னர் பெயன் அஃதாவது பெய்வது என்னும் செயலைக் கொண்டு வினை அமைந்தது. இதனால்தான் தொல்காப்பியர் இவற்றைத் தனித் தோற்றமாகச் சொல்லி இடை, உரியை அவற்றின் வழித்தோற்றம் என்றார். இவ்விளக்கத்தால் பெயர் முதலிடம் பெறுகிறது. அதனால்தான் தொல்காப்பிய நூற்பாவில் பெயரே என்று தேற்றேகாரம் கொடுக்கப்பட்டது. சொல் எனப்படுவ என்றாரே - 105 35-a-14