பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்றிப் பெயர்ச்சொல் வினைச்சொல் என்று சொல் சேர்த்துச் சொல்லவில்.ை ஆனால் அடுத்த நூற்பாவில் இடைச்சொல், உரிச்சொல் என்று சொல் சேர்த்தது மன்றி, இடை ச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் ' எனக் கிளவி என்ற சொல்லையும் இணைத்தார். இவ்விணைப்பு ஏன்? இடை: சொல் உரிச்சொல் என்று சொல்லவேண்டியதை வலியுறுத்துவது மட்டுமன்றி: கிளவி என்ற சொல்லைக் கிளத்தல், அஃதாவது எடுத்து மொழிதல், அழுத் மாகச் சொல்லல் என்ற பொருள்களையும் உள்ளடக்கினார். இதனால் மற் றொன்றையும் புலப்படுத்திக்கொள்ளலாம். முன்னர்த் தொல்காப்பியத்தில் கிளஸ் எனும் சொல் அதிக எண்ணிக்கையில் வருவதையும் ஒரு பகுதியே கிளவியாக்கம் என்று பெயர் பெற்றதையும் காண்கின்றோம். கிளவியாக்கம் என்பது சொல்லை ஆக்குவதையும் குறிக்கும். மொழியை ஆக்குவதையும் குறிக்கும். எனவே கிளவி என்ற சொல்லுக்குத் தனிச்சிறப்பமைப்பு உண்டு. இவ்வாறு முதலில் கிளக்கப்பட்டதுதான் பெயர். அதன்பின் வினை. இவற்றிலிருந்து தான் இடை, உரி எனக் கண்டோம். ஆனால் பிற்கால இலக்கணத்தார் முன்னர்க் கண்ட பெயர் வினையோடு இடைச்சொல்லும் உரிச்சொல்லும் சேர்த்து நான்கையும் ஒரு தோற்றமாகக் கூறியது மட்டுமன்றி 'துவலுங்காலை முறை சிறந்தனவே என்று குறித்தார். நுவலுங்காலை என்பது இவை நான்கையும் சொல்லும் பொழுது என்றும் பொருள்படும். உலக வழக்கைச் சொல்லுவது என்றும் பொருள்படும். எவ்வாறெனின் நுவலுதல் எனும் சொல் இவை போன்ற பல குறிப்புப் பொருள்களைத் தருவது. நுவலுங்காலை என்பதோடு முறை சிறந்தன என்று சொல்லி இவை நான்கையும் இவ்வரிசையில் சொல்வது தான் முறை. அவ்வரிசையில் சொல்வதுதான் சிறப்பு என்பதோடு இம்முறை சிறந்த முறை என்றும் தொல்காப்பியத்திற்குச் சற்று வேறுபட்ட பொருட் குறிப்பையும் கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் முறையிலும் சிறப் பிலும் பெயர் தனியிடம் பெற்றது. முதலிடமும் பெற்றது. பெயர் என்பது பெய் எனும் வேர்கொண்டது என்றோம். பெய்தல் வெளிபடுதல் என்றும் கண்டோம். விண் ணிலிருந்து பெய்யும் மழை வெளிப் டுகின்றது. அவ்வாறு வெளிப்படும்போது - " நீர் என்ற பொருள் வெளிப்படுகின்றது விண் என்ற இடம் வெளிப்படுகின்றது. 106