பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிங்கலத்திற்குப் பின்னரும் உரிப்பனுவல்கள் பல எழுந்தன. ஏறத்தாழ் அவற்றின் பெயர்களையே அறிகிறோம். இந்நூலில் நான ஒவ்வொரு செய்ய ளுக்கும் எழுதியுள்ள விரிவுரையில் ஒப்பீடு என்றொரு பகுதியை வகுத்திருக்கி, றேன். அதில் சூளாமணியிலுள்ள சொற்களுக்கு ஒப்பாக அன்றி அவையேயாக உள்ள வேறு சில நிகண்டுகளின் சொற்களைக் காட்ட முனைந்த நான் பிங்கலம், கயாதரம், நாமதீபம் என்பவற்றையே தேர்ந்து கொண் (-ಪT. இந்நூல்க ளுக்கு இடைக்காலம் நான்கு முதல் ஆறுவரை அமைந்த நூற்றாண்டுகளாகும். சில நூற்றாண்டுகளில் மொழி வழக்குகள் மாறுவது இயற்கை, அதனி னும் மிகத் தொன்மை வாய்ந்த மொழி அதன் மக்களால் வழங்கப்படும்போது மாறுவதற்குக் கரணியங்கள் உண்டு. சொற்களின் கடுமையும் மக்களால் மிகுதியாகப் பயன்படுத்தப்படுவதும் இவ்வாறு மாற வாய்ப்பளிக்கும். இத னால் நான் நூற்றாண்டு இடைவெளிகளுள்ள மூன்று நூல்களைச் சூடாமணி யுடன் ஒப்பிடத் தேர்ந்துள்ளேன். இவ்வகையில் கயாதரம் கயாதரர் என்பவரால் எழுதப்பட்டது. இந் நூலாசிரியரும் தன் சிறப்புப் பாயிரத்தில் அவரைக் குறித்துள்ளார், கயாதாம் புலவோரால் போற்றப்பட்டதாயினும் பயிலும் மக்களால்கூட மிகுதியாகப் போற்றப்படவில்லை. ஓரளவிலேயே கற்கப்பட்டது. எனவே அதுபற்றிய விவரங்களைத் தராமல் சொற்களை ஒப்பீடாகப் பயன்படுத்தியமை மட்டிலும் குறிக்கத்தக்கது. நான்காவதாகிய நாமதீபம் என்பது முந்தைய நூற்றாண்டு நூல். கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் என்பார் அதன் ஆசிரியர். மற்றைய நூல்களிலிருந்து இந்த நூற்பிரிவு வேறுபட்டது. படலங்கள் என்ற பெரும்பிரிவு ஆறையும் படலங்களின் உட்பிரிவுகளாக வர்க்கங்கள் பதினாறை யும் கொண்டு அமைந்தது இது நூலில் அமைந்த பொருள் தலைப்புகளும் உரிப்பனுவல்கள் பலவற்றிலும் வேறுபட்டாலும் நாமதீபம் சற்று அதிக வேறு பாடு கொண்டது. இந்நூல் வெண்பாவால் ஆகியது. 808 வெண்பாக்களைக் கொண்டது. இந்நான்கு கொண்டு மட்டுமன்றிப் பிறவற்றையும் ஒருசேர நோக்கிச் சில கருத்துக்களைச் சொல்லவேண்டும். அக்கருத்துக்கள் உரிப் பனுவல்களின் பயன் என்ன? அந்நூல் சொற்கள் கையாட்சிக்கு எவ்வாறு பயன்பட்டன? என்பனவற்றின் விளக்கமாக அமிையும்.