பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலத்தில் தமிழைப் பயில்வோர் தொடக்கத்தில் உரிப்பனுவல் களையே பயிலவேண்டும். மனப்பாடம் செய்யவேண்டும், எந்நிலையில் கேட்டாலும் ஒரு பொருட்குப் பல சொல்லையும் பல பொருள்கட்கு ஒரு சொல்லை யும் சொல்லவேண்டும். அவ்வாறு பயின்று சொற்களில் படிந்தால்தான் செய்யுள்களைப் புரிந்துகொள்ளவும் தாம் செய்யுளுக்கேற்பச் சொற்களை அமைக்கவும் இயலும். காலப்போக்கில் இரு பொருளில் எழுதும் சிலேடை செய்யுள்களில் அதிகம் கையாளப்பட்டது. அவ்வாறு கையாளவும் படிப்போர் அதனைப் புரிந்துகொள்ளவும் உரிப்பனுவல் மனப்பாடம் இன்றியமையாதது. ஏறத்தாழப் பதினான்காம் நூற்றாண்டுவரை இப்பயிற்சிப் பழக்கம் தவறாமல் இருந்தது. பின்னர் வரவரக் குறைந்தது. ஆனாலும் மாபெரும் புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் காலத்தில் அவரது மாணவர்கள் நிகண்டு பயின்றவர்கள். சில மனப்பாடம் செய்தவர்கள் பெரும்புலவர் தியாகராசச் செட்டியாரும் மகாமகோபாத்தியாயர் எனப்படும் மிகப்பெரும் ஆசிரியருமாகிய உ. வே. சாமிநாத ஐயர் அவர்களும் உரிப்பனுவல் பயின்றவர். இக்காலத்தில் நிகண்டு என்றாலோ, உரிப்பனுவல் என்றாலோ அப்படியென்றால் என்ன? என்று வின வும் நிலைதான் உள்ளது. பல புலவர்களுக்கே இந்நிலை உண்டு. நிகண்டு என்னும் சொல் நைகண்டுகம் என்னும் வடசொல்லின் திரிபா கும். தமிழில் மிகுதியாக வழங்கத் தொடங்கியது. உரிச்சொற்களின் தொகுதி தான் நிகண்டு என்றாலும் உரிச்சொல்லின் பெயருடனே உரிச்சொல் நிகண்டு என்றொரு நிகண்டு உண்டு. உரிச்சொற் பனுவல் மறைக்கப்பட்டு நிகண்டு பெரு வழக்காகியது. கலைக்கோட்டுத் தண்டு என்றொரு இலக்கண நூல் உண்டு. அதன் ஆசிரியர் கலைக்கோட்டுத் தண் டன். அவர் நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டன் என்று குறிக்கப்பெறுவார். இவர் பழம்பெரும் புலவர், நிகண்டு என்னும் சொல்லுக்குத் தொகுதி என்று பொருள். நிகண்டு நூல்களின் உட்பிரிவுகள் தேவப்பெயர்த் தொகுதி. மக்கட்பெயர்த் தொகுதி என தொகுதிப் பெயரால் குறிப்பிடப்படும். மற்றொரு பொருள் கூட்டம் என்பது. பல்பொருள் கூட்டத்து பலபெயர்த் தொகுதி எனற ஓர் உட்பிரிவின் தலைப்பில் கூட்டம் என்ற சொல்லைக் காண்கிறோம். இவ்விரு பொருள்கள் அல்லாமல் மூன்றாவது பொருளாகப் பேச்சு வழக்கில் உண்மை என்ற பொருள் ஏற்பட்டது. நிகண்டவாதி என்று வாதமிடுவோரில் ஒரு பிரிவினர் உள்ளனர். அவர் உண்மையை வாதிடுபவர் என்ற பொருளில் கையாளப்பட்டார். வாதமிடுவோர் இரண்டு கருத்துகளில் எக்கருத்து உண்மை’ எக்கருத்தை நிலைநாட்ட வேண் 111