பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டும்? என்று காணும் குறிக்கோள் உடையோர். இவ்வாறு உண்மை காண, படுவதால் நிகண்டிற்கு உண்மை என்ற பொருள் நேர்ந்தது. வழக்கில் நிகண்டுப்பேச்சு, நிகண்டு பேசுதல், நிகண்டு எழுதியோன் என்னும் 65T೬i ளில் எல்லாம் உண்மைப் பேச்சு, உண்மை பேசுதல், உண்மை எழுதியத் என்ற பொருள்களில் நிகண்டு உண்மையாக அமைந்துள்ளது. இதன்பு, நோக்கினால் நிகண்டன் கலைக்கோட்டுத் தண் டன் உண்மைக்கு வாழ்ந்தவ னாகிய கலைக்கோட்டுத் தண்டன் என்று கொள்ளவேண்டும். இவ்வா, உணமைப்பொருள் வழக்கிலிருந்ததே தவிர இலக்கிய அமைப்பில் இல்லை, நிகண்டிற்கே நிகண்டு அகராதி என்றொரு நூல் உண்டு. இவ்வாறு நோக்க நிகண்டன் என்பது நிக்ண்டு எழுதியவன் என்று குறிப்பிடாது. நிகண்டில் பயிற்சியும் மனப்பாடப் படிப்பும் ஓய்ந்து போனாலும் இக்காலத்தி லும் ஆசிரிய நிகண்டு என்றொன்று எழுந்தது. இதை ஆண்டிப்புலவர் என்பவர் எழுதினார். இந்நூலை இக்காலத்தளவில் இறுதி நிகண்டு நூல் என்று சொல்லலாம். நூலகங்களில்தான் உரிப்பனுவல்களைக் காணமுடிகிறது. அதனினும் சில பழமையான நூலகங்களில்தான் பழைய பதிப்புகளைக் காண இயலும், , - இக்காலத்தில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் திவாகரம் பிங்கலம், சூடாமணி முதலியவற்றைப் பதிப்பித்துள்ளனர். பெரும்பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் நாமதீப நிகண்டைப் பதிப்பித்தார். அதன் மறுபதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நான் பதிப்புத்துறைத் துணை இயக்குநராக இருந்தபோது மிக விருப்புடன் வெளியிட ஆவன செய்தேன். அக்காலத் துணைவேந்தர் முனைவர் வ. அய். சுப்ரமணியன் அவர்கள் என் வற்புறுத்தலை ஏற்றுப்பெரு மனத்துடன் இசைவு தந்தார்கள். அப்பதிப்பும் விற்பனையாகிவிட்டமை மகிழ்ச்சிக்குரியது. உரிப்பனுவல்கள் பட்டியல் ஒருபுறமிருக்க அதன் எதிர்காலப் பயிற்சி பற்றி எண்ணினால் ஏக்கம் மட்டுமன்று. ஐயகோ! என்ற அழுகையும் சிலருக்கு வரலாம். தொன்மைப் பயிற்சி நூல், அதனினும் இக்காலத்தில் பயன்படாத நூல் ஏன் உலவ வேண்டும்? என்ற வினாவும் தவறில்லாததாக அமையலாம். - இக்கால எழுத்து வழக்கிலும் மும் ஆட்சிபுரிந்து கொண்டுள்ள்