பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துவிட்டன, பல மறைந்து வருகின்றன. பல மறைந்து போகும் எஞ்சு வது என்ன? அம்மா, அப்பா என்று இல்லத்தில் அழைத்து வழங்கும் உறவுச் சொற்கள் எஞ்சலாம். அவையும் நீண்டகாலத்திற்கு வாரா, ஏனெனில் அம்மா மம்மியாகி வருகிறது. அப்பா டாடியாகி வருகிறது. அங்கிள் வழக்கிற்கு வந்துவிட்டது. ஆன்ட்டியும் அவ்வாறே. உறவுச் சொற்களும் மறைந்தால் தமிழ் அச்சு நூல்களில் அவற்றின் பழைய பதிப்புகளில்தான் தமிழ் உருவத் தைக் காண முடியும். அண்டி வந்துகொண்டிருக்கும் எதிர்காலத்தில் இக்காலம் வழங்கும் வடமொழியும் தமிழும் ஏறிவிட்டால் என்ன எஞ்சும்? இவற்றைப் பற்றிச் சிந்திக்காத தமிழன் தான் எஞ்சுவான். அறிஞர்கள், பாட நூல்களில் பாடங்களை அமைப்பவர்கள் இவ்வெதிர்கால நிலையைச் சற்று நோட்டமிட வேண்டும். நோட்டமிட்டுப் டாட அமைப்பில் இவை வாய்க்க. வாய்ப்பாக அமைய இடமுண் டாக்க வேண்டும். பாடங்களை அமைப்பவர்கள் கூட இப்போதுள்ள பாடநூல் பதிப்பகத்தாரின் விருப்பத்திற்குத் தலைசாய்த் தும் இணங்கிப் போகின்றனர் என்று பேசப்படுகின்றது. இந்நிலை தமிழுக்கு மேலும் தேக்கத்தையும் ஏக்கத்தையும் தருவதாகும். 'சொல்லில் உயர் மிழ்ச்சொல்லே' என்று பாடிய பாரதி பிறர் பேசுவ ബു r9 حري. o rمس தாக எடுத்துக்காட்டி, ஒரு பாடலில் ' மெல்லத் தமிழினிச் சாகும்- அந்த மேற்கு மொழிகள் ,விமிசை யோங்கும்

என்று பதிந்து வைத்துள்ளார். அவரே அடுத்து, என்று சொல்லத்தகாதவன் சொன்னான் என்று தன் உள்ள எரிச்சலைக் காட்டிக்கொண்டார். தமிழ் உணர்வில் ஊறிய பாரதிக்கு அந்த எரிச்சல் வயிற்றெரிச்சலாகவும் இருந் திருக் கும். பாப்பாவை ஓடி விளை பாடச் சொன்ன அவன், தமிழைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாடியமை அவன் உள்ளுணர்வின் வடிப்பாகும். பாரதியின் எண்ணங்கள் எல்லாம் எந்த முடிவைக் கொண்டிருந் தன என்றால், அவன் தன் கட்டுரை ஒன்றில் எழுதியத் தொடர்தான் நினை வுக்கு வருகிறது. - 'நான் சொல்வதைக் குறித்து வைத்துக்கொள். தமிழ் எதிர்காலத்தில் ஒளிவிட்டுத் திகழும் என்று தன் கருத்தைக் கல்வெட்டாக்கி உள்ளான். ஒரு காலத்தில் பாரதி தமிழறியாதவன் என்று சொன்ன பெரும்புலவர் களும் வாழ்ந்தனர். பாரதி எழுதிய பாஞ்சாலி சபதத்தை அறிவோம். அதில் . . . . . . 113 #5-a-15