பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பதிப்பில் பிற்சேர்க்கையாக பாரதியே குறிப்புரை எழுதியுள்ளான். அதைப் படித்தால் பாரதியின் தமிழுணர்வும் புலமைத் தெளிவும் புலனாகும். பா, யின் கல்வெட்டாகக் குறித்த கருத்து கண்கூடாகக் காணப்படவேண்டுமென்றால் பன்முயற்சிகள் தமிழரிடையே, தமிழ் பயின்றோரிடையே, தமிழகத்து அரசிய லாரிடையே, அவரினும் தமிழுணர்வு உணர்வுள்ளவரிடையே முளைத்துத் தளிர்த்துத் தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்தாக வேண்டும். அவ்வி,ை முளைத்து நம் வழியினர்க்கு வழிகாட்டவேண்டும். இவ்ற்றிற்குச் செய்ய வேண்டிய பலவற்றுள் உரிப்பனுவலைப் பாடமாக்கலும் பயிலச் செய்தலும் ஒன்றாகும். அப்பொழுதுதான் உரிப்பனுவல் தோன்றியதன் கதிர் விளையும், 9. பனுவலில் மணி: சூளாமணியா? சூடாமணியா? உரிப் பனுவல்களில் இந்நூலில் சூடாமணிச் சொற்கள் தான் இன்றியமை யாதது. உரிப்பனுவல்களின் பெரும் அமைப்பு, உட்பிரிவு முதலியவை சற்றுச்சற்றே வேறுபட்டாலும் அடிப்படைக் கருத்து நழுவவில்லை. சூடாமணி நூற்செய்யுட்கள் அறுசீர் விருத்தங்கள். பயிலுவதற்கு எளியவை. அதனினும் இந்நூற் பதிப்பில் பதிப்பமைப்பு மேலும் எளிமையாக்கும். ஆனால் இந்நூலின் இறுதியில் மெய்யெழுத்துக்களை எதுகையாக வைத்துக் ககரத்திலிருந்து தொடங்கி னகரம் வரை எதுகை அமைப்பில் நூற் பிரிவு முடிகின்றது. இதன் தலைப்பு ககர வர்க்கம்-னகர வர்க்கம் என்று அமைந்துள்ளது. இது அத்துணைச் சிறப்புடையதாக இந்நூலுக்கு அமையவில்லை. வலிந்து சொற்களை இழுத்தமைப்பதாக உள்ளது. இஃதொரு குறை என்றே சொல்லலாம். உரிப்பனுவல்களில் சூடாமணிதான் மணிச்சொல்லைப் பெற்றுள்ளது என்றாலும் பயிலுமளவிலும் ஒளிவிடச்செய்யும் மணிதான். சூடாமணிக்கு முந்தைய உரிப்பனுவல் ஆசிரியர்கள் பலர் தம் பெயரையே நூலுக்கும் அமைத் தனர். ஆனால் இந்நூலின் ஆசிரியர் மண்டலப் புருடர் தம் நூலுக்கு வேறு பெயரை அமைத்துள்ளார். அதனைப் புது வகையாகவும் அமைத்துள்ளார். புத்தொளி உள்ளதாகவும் அமைத்துள்ளார். அப்புத்தொளியையும் மணியொன் யாக அமைத்துள்ளார்.