பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூளாமணியா? சூடாமணியா? ஒருவன் மகனுக்கு மகன் பிறந்தால் அவன் 'பேரன்’ எனப்பெறுகிறான். 'பெயரன்’ என்பதுதான பேரன் ஆயிற்று. மகளானால் பேர்த்தி-பெயர்த்தி ஆகிறாள். பேர்த்தியைப் பேத்தி என்கிறோம். பாட்டன் பெயரை மகன் பெற்ற குழந்தைக்கு இடுவது மரபு. செட்டிநாட்டு நகரத்தாரிடையே இம் மரபைக் காண்கிறோம். அழகப்பாவின் பேரன் அழகப்பன்; முத்துக்கருப்பன் பேரன் முத்துக்கருப்பன். பெண் குழந்தைகளும் அழகம்மை, முத்துக்கருப்பி என்று பெயரிடப்படுகின்றனர். பாட்டனுக்கே "பேரன் -பெயரன்' என்ற வழக்கும் உண்டு. பேரனால் பாட்டன் பெயர் தொடர்கிறது; விளங்குகிறது. பேரனால் பெயரும் புகழும் பெறும் பாட்டினையே பேரன்’ என்பதும் உண்டு, 'நீ என் அடிமை' என்று தடுத்தாட்கொள்ள வந்த அந்தண வடிவத்தவர் சுந்தர மூர்த்தியிடம் 'உன் பாட்டன் எழுதிக்கொடுத்த எழுத்தைப் பார்' என்பவர், . 'ஐயா மற்றுங்கள் பேரனார் (பாட்டனார்) தம் தேசுடை எழுத்தேயாகில் தெளியப் பார்த்தறிமின்’ என்றதைச் சேக்கிழார் காட்டுகிறார். இவ்வாறாகப் பாட்டனும் "பேரன்' ஆவான். ஆனாலும் குழந்தை, பேரன் என்று பெயர் பெறுவதே பெரு வழக்கு. இவ்வாறு குழந்தைக்குப் பெயர் சூட்டப்பெறுவது தொ. ங்கிற்று. பின்னர்ப் பாட்ட ன்களாகப் பெயர் பெற்ற பெரியோர் பெயரை இட்டனர். தொடர்ந்து மரபால் பெயர், இயல்பால் பெயர், நிறத்தால் பெயர் உருவத்தால் பெயர், செயலால் பெயர், தெய்வத்தால் பெயர் எனப் பெயரிடுதல் வளர்ந்தது. இதுபோன்றே நூலுக்குப் பெயர் சூட்டுவதும் தொடங்கி வளர்ந்தது. முன்னோர் செய்த முதல் நூலின் பெயரை இடுவது என்று தொடங்கியது. பின்னர், எழுதிய ஆசிரியன் பெயரால், நூலின் மிகுதிப் பொருளால், பாடல்க ளின் எண்ணிக்கை அளவால், நூல் செய்தற்கு உதவி செய்வித்தோனால், நூலின் தன்மையால் பெயர் சூட்டினர். இவ்வறுவகைக் கரணியங்கள் அல்லா மல் இடுகுறியாலும் நூல் பெயர் பெறும் என்றார் பவணந்தியார். இவற்றிற்குச் சான்றுகள் காட்டும் மயிலைநாதர் என்னும் உரையாசிரியர் 'சூளாமணி' என்னும் காப்பியம் தன்மையால் பெயர் பெற்றது' என்றார்.

  • பெயர், பேர் என்னும் இரண்டையும் இந்நூலாசிரியர் கையாண்டுள்ளார்,

115