பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிகள் அணியாகும் சிறப்பியல்பை வைத்து தெய்வமணி ஐந்து என்று கூறினர். அவை, சிந்தாமணி, சூளாமணி, சிமந்தகமணி, சூடாமணி, கெளத்துவமணி, இவற்றுள் கெளத்துவம் மார்பில் அணியப்படுவது. 'சீமந்தகமணி' கழுத்தில் அணியப்படுவது. மற்றைய மூன்றும் தலையில் சூட்டப்பெறுவன, எனவே 'சிகாமணிகள்' என்றும் தலைமணிகள்’ என்றும் சிறப்பிக்கப்படும். இம்மூன்றும் சொல்லமைப்பில் ஒர் ஒற்றுமை கொண்டவை. சிந்தா சூளா, சூடா என்னும் ஒருவகை கொண்டவை. இலக்கணத்தால் இவை ஈறு. கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்; எதிர்மறைப்பொருள் கொண்டவை. இவற்றைக்கொண்டு சிந்தாத மணி, சூளாத மணி, சூடாத மணி எனப் பொருள் கொள்ளலாமா? இவ்வாறு கொள்ளத் தடை உண்டு. 'பாயா வேங்கை' என்பது ஒரு வழக்கு. பாயும் புலியை நீக்கி, நிற்கும் வேங்கை மரத்தைக் குறிக்கும். இவ்வாறு மேற்கண்ட அடைமொழிகளைக் கொண்டால் இன்றியமையாத மணி ைபயே நீக்கிவிடும். ஆனால், ஆசிரியர் பெயர் அறிய முடியாத ‘தமிழ் விடு தூது’ என்னும் நூல், " சிந்தா மணியென் றிருந்த உனைச் சிந்தென்று சொல்லிய நா சிந்துமே 3 * என்று சிந்தாத மணிபோலப் பாடியது. எதிர்மறைக் குறிப்பு இருப்பினும் நயத்திற்காகச் சொல்லப்பட்டது; மணி சிந்தும் பொருள் அன்று. வேண்டு மானால் சிதறும் பொருள் எனலாம். மேலும், சிவபெருமானைப் பாடும் சம்பந்த முனிவர் என்பார், 'வயற்கமலைத் தேவர்கள் சிந்தாமணி’ என்றார். சிவபெருமான் சிந்தாத என்னும் எதிர்மறைப்பொருளால் பாடப்படுபவர் அல்லர். இவ்வடை மொழியுடன் கலைமகள் சிந்தாதேவி எனப்பெற்றாள். சாததனாா, - சிந்தாதேவி செழுங்கலை நியமத்து' என்றும், 'சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து' என்றும் கலைமகளைக் குறித்தார், எதிர்மறைப் பொருள் கொண்டால் ജ്ഞ് மகள் சிந்தாதவள்’ என்பது பொருந்தாது. விளக்கிற்கும் இவ்வெதிர்மறை பொருந்தாது. இவ்வெதிர்மறைச் சூழலிலிருந்து மீள மாணிக்கவாசகர் ஒரு