பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சிந்தாமணி... ... ... ...” என்ற ஒரு பாடலைத் தொடங்கியவர் நான்காவது அடியில் எதுகையோடு 'சிந்தாகுலம், ... ... ...” என்றொரு சொல்லை வைத்தார். சித்தாகுலம் என்றால் மனக்கவலை. சிந்தை- ஆகுலம் எனப் பிரியும். (ஆகுலம்-கவலை) இவ்வாறே சிந்தை-தேவி எனப்பிரிந்து பொருள்தரும். இதற்குப் பொருள் விரித்த உ. வே. சா. அவர்கள் "யாவர்க்கும் சிந்தையிற்றோன்றிச் சொற்பொருள் உணர்த்துபவன் என்பது பொருள்' என்றார். சிந்தாமணியும் இது போன்றே சிந்தை மணி என்று பிரிந்து பொருள் தரும். சிந்தாமணி என்னும் பெயர்கொண்ட நூல் சீவக சிந்தாமணி. சீவகன் கதையைக் கூறுவது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றானது. இப்பெயரை இக்காப்பியம் பெற்றதற்குக் கரணியமும் தன்மையே. சிந்தாமணியாகச் சிவகன் கொள்ளப்பட்டுள்ளான். அவன் பிறந்து கிடந்தபோதே தாய் விசயை, 'சிந்தாமணியே கிடத்தியே' என்றாள். பின்னும் அதன் ஆசிரியர் திருத்தக்க தேவர், 'சிந்தாமணி ஏய்ந்த சித்திர மண்டபத்துச் செல்வன் புக்கான்’ என் றார். இதற்குப் பொருள் தந்த நச்சினார்க்கினியர், 'சிந்தாமணியின் தன்மை பொருந்திய செல்வன்' என்றார். காப்பியத்தை நிறைவேற்றும் தேவர் 'சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன்' (விரிவாகச் சொன்னேன்) என்று சீவகனைச் சிந்தாமணியாக நிறைவேற்றினார். இச் சீவகன் என்னும் சிந்தா மணியை, நச்சர் 'மேல் நினைத்தன கொடுக்கின்றானாதலின் 'சிந்தாமணி ஏய்ந்த செல்வன் என்றார் என்று விளக்கி, சிந்தாமணி 'நினைக்கின்றவற்றைக் கொடுப்பது' என்னும் கருத்தையும் வெளிப்படுத்தினார். 'சிந்தாமணியைக் கண்ட பொருள் தொடர்பில் சூளாமணியைக் காண வேண்டும். சூளாமணி பொருளில் சிந்தாமணியுடன் ஒத்தும் வேறுபட்டும் நிற்கிறது. உட ன்பாட்டுப் பொருளில் ஒத்து நிற்கிறது. எதிர்மறைப் பொருளில் வேறுபடுகிறது. அதாவது சூளாத மணி என்பதும் பொருந்து கிறது. சூளா என்னும் சொல்லின் பொருள் வழியாக அதனைக் காணலாம். 119