பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொளை என்றால் ஒட்டையிடப்படுவது. தொள் என்பதற்குத் தொளை யிடு என்று பொருள். தொளையிடப்பெற்ற காதைத் தொள்ளைக்காது என்தி றோம். இத் தொள் என்பது தொள்கர் என்று தொழிற்பெயராகும். "தொள்கலும் குயிறலும் தொளைத்தல் ஆகும்" என்றார் பிங்கல. இத் தொள்கல் தோட்டல் தோட்கல் என்று தொளையிடுதலைக் குறிக்கும். 'கேள்வியால் தோட்கப் படாத செவி' என்று வள்ளுவர் சான்று தருகி றார். இது தோளாத என்று பெயரெச்சமாகித் தொளையிடப்பெறாத என்னும் எதிர்மறைப் பொருளைத் தரும். இதுபோன்றே சூள் என்னும் சொல் வளர்ந்து சூழ்தல் ஆகும். குடைதல் தொளைத்தல் என்பன இதன் பொருள்கள். இதன் இலக்கியச்சொல் குயிறல், சூள் எதிர்மறைப் பொருளுக்காகச் சூளாத என்றாகிச் ஈறுகெட்டுதுளாளன்றாகும். மணியுடன் புணர்ந்து சூளாமணி ஆகும். தொளையிடப்பெறாத மணி என்று பொருள். மணியை மாலையாக்க வேண்டுமானால் அதைத் தொளையிட்டு நூலிலோ பொன் சரட்டிலோ கோக்க வேண்டும். இவ்வாறு முத்து முதலிய வற்றில் தொளையிட்டுக் கோக்கும் கலை தெரிந்த தொழிலாளர் இருந்தனர். 'மணி குயிற்றுநர் முத்தம் கோப்பார் ஆகும்’ என்று பிங்கலர் அவரை 'மணி குயிற்றுநர் என்றார். இன்று இக்கலைத் தொழிலினர் தமிழகத்தில் இல்லை. ஐதராபாத்திலும் சூரத்திலும் மிகுதியாக உள்ளனர். நூலில் மணி கோக்கப்படுவதை வைத்து வள்ளுவரும், 'மணியில் திகழ்தரு நூல்போல்' என்று உவமையாக்கினார். இக்குறள் ஒரு கருத்தை அறிவிக்கிறது. மணியில் கோக்கப்பட்ட நூல் மணிக்குள் இருந்து திகழ்தரும். இதனால் அதாவது நூல் உள்ளிருப்பதால் மணி தன் இயல்பான ஒளியில் குறைகின்றது. திருத்தக்க தேவரும் 'கோவா மணி' என்று பாட உரை வகுத்த நச்சர் 'துளையிடாத மாணிக்கம் என்றார். தொளையிடப் பெறாத மணியில்தான் மணியின் இயல்பான ஒளி உண்டு. தொளையிடப் பெறல் மணிக்குக் குறை. எனவே, தோளாத மணி-சூளாத மணிதான் சிறந்தது. இவ்வாறு சூளாமணி சூளாத மணி என்று எதிர்மறைப் பொருள்ை தந்து தன் பெருமையை நாட்டுகின்றது. இவ்விரண்டு சொற்களையும். இணைத்துக் காட்டுவதுபோல் i . திக்க தேவர்,” --- ... ---