பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಆಟಿಕ್ಲ காப்பியங்களில் முதன்மையாக வைக்கப்பெற்ற காப்பியம் சூளாமணி எனப்பெயர்பெற்றது. சீவகனைச் சித்தாமணி எனறு சிறப்பித்தமை போன்று சூளாமணிக் காப்பியத் தலைவன் பயாபதி என்பான். . 'உலகின் முடிக்கொரு சூளாமணி ஆகினான்' என்று சிறப்பித்துள்ளன் தோலாமொழித்தேவர். . இச்சூளாமணிச் சொல்லமைப்பிலேயே சூடாமணி நம்மை அணுகுகிறது, சூடாமணியும் சூளாமணி போன்றதே. இரண்டையும் ஒன்றாகவும் கொள்வர். ஆனால் தெய்வமணி எனப்பெற்ற ஐந்தில் இரண்டும் வெவ்வேறாக வைத்து எண்ணப்படுவதால் தனித்தனியே காணப்பெற நேர்கின்றது சூடு உச்சி, குடுமி குடம் தலையுச்சி குடலம் தலை சூடு (வினையாக) சூடுதல் தலையில் அணிதல் சூடிகை தலையில் குடப்பெறுவது மூடு மூடப்பெறுவது முடை; மேடு மேடானது மேடை; கூடு கூடானது கூடை. இவை போன்று சூடப்பெறுவது சூடை. சூடப்பெறும் மணி சூடைமணி. 'சூடைமணி என்னும் சொல்லுருவத்திற்குக் கம்பர் சான்று தருகிறார். இராமனிடம் அடையாளப் பொருளாகக் கொடுக்குமாறு சீதை தான் பொதிந்து வைத்திருந்த மணியை அனுமனிடம் கொடுப்பவள், 'சூடையின் மணி கண்மணி இப்பது ஆடையின் கண் இருந்தது பேரடையாளம்' என்றாள். 'சூடை' என்னும் சொல்லாட்சியை அழுத்தமாக்குவது போன்று அடுத்த அடியில் எதுகையாக ஆடை என்று அமைத்துள்ளார். எனவே 'சூடைமணி என்பது உரிய சொல். நிரம்பவ்ழகிய தேசிகர் என்பாரும், குடை விளங்கு மாமணி என்று 'சூடை' என்னும் சொல்லுருவைக் காட்டினார். . - 122