பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்துள்ளது. பெளத்தமும் இலக்கியங்களைத் தந்துள்ளது. மற்றையவை சிறுசிறு சமயங்கள். அவை ஒவ்வொன்றிற்கும் கோட்பாடுகளைக் குறிக்கும் நூல் உருவாகியது. சமண சமயத்தவர், இளங்கோவடிகள் தொடக்கமாகப் பல இலக்கியங் களையும் இலக்கணங்களையும் படைத்துள்ளனர். இச்சமயத் துறவிகள் விடாப்பிடியான சமணக் கோட்பாடுகளைக் கையாள்பவர்கள். ஒரு காலத்தில் சமணத் துறவிகள் சில மன்னர்களுக்கு அஞ்சித் தலைமறைவாக வாழ வேண்டி நேர்ந்தது. அவ்வாறு வாழ அவர்கள் பெரும் பகுதியாக மலைகளையே தேர்ந்தனர். திருச்சிராப்பள்ளி மலைக்கோவிலில் உபரே அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறத்தே ஒரு குடைவு மலை உள்ளது. அதில் உள்ள படுக்கை குறிப்பிடத்தக்கது. அதற்குச் செல்வதற்கே சற்று முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனைவிட நார்த்தாமலையில் ஒரு குடைவு உண்டு. அதை இக்காலத்திலும் சென்று காண வசதியாகக் கைப் பிடியை அமைத்துள்ளனர். அக்காலச் சமணத் துறவிகள் இங்கு மறைந்து வாழ்ந்தனர். அக்குடைவிற்குச் செல்வதற்கு மிகக் கூர்ந்த நோக்குடன் ஒவ்வொரு அடியாக மலைச்சரிவில் வைத்து ஏழு அடி நடந்தால் அவ்விடத்தை அடையலாம். சற்றுத்தவறினாலும் அடிவாரத்தில் பிணமாகவேண்டியதுதான். இதற்கு ஏழடிப்பட்டம் என்ற பெயர். இவ்வாறமைந்த மலைக்குடைவுகளில் சமணத் துறவிகள் படுப்பதற்கு வழவழப்பாகப் பாறைக் கல்லைத் தேய்த்துத் தலையணை உயரமின்றிப் படுத்துள்ளனர். ஒரு படுக்கையில் அவருக்குரியதாக அவரது பெயர் வெட்டப்பட்டிருக்கும். முன்னர்க் குறித்த திருச்சி மலைக்குடை வில் உள்ள ஒரு படுக்கையில் சிரா என்று குறிக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்தமையால்தான் திருச்சிராப்பள்ளி என்று பெயர் பெற்றது. பள்ளி என்பது படுக்கையையும் குறிக்கும். சிந்தித்து எழுதுமிடத்தையும் குறிக்கும். சமணத் துறவிகள் தம்தம் பள்ளியில் இரண்டையும் செய்தனர். சமணத் துறவிகளால் தமிழ் பல இலக்கியங்களையும் பல இலக்கணங்களையும் பெற்றுள்ளது. இவ்வகையில் சமணம் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளதாகக் குறிக்கலாம். அத்தொண்டால் பயன்பெற்றோர் தமிழர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி வடபுலத்திலும் பல சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் உள்ளன. தமிழகத்துச் சிற்றன்னவாயிலில் ஒரு மலையில் சமண்த் துறவிகள் வாழ்ந்து தாம் வாழ்ந்த குடைவுகளில் ஓவியங்களை வரைந் துள்ளனர். சிற்றன்னவாயில் ஒவியம் நாடறிந்த ஒன்று. இஃதே போன்று எல்லோராவில் சிற்பங்கள் அமைந்துள்ளன. அவையும் சமணம் தந்த பரிசே. சமணம் இத்துணைச் சிறப்புடையது என்றாலும் அன்னோர் இல்லறத்தை ஒதுக்கிப் பாடியமை செல்லாக் காதாயிற்று. ஆனால் சிவக 127