பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாமணி பல மனங்களுக்கு இடந்தந்து இல்லறத்திற்கு அதிகப்படியா, தனிச்சிறப்பு தருகின்றது. பலதார மனத்திற்கு வழிவகுத்தது. பெண்கள் இண்பக் கருவிகளாகக் கொள்ளப்படவும் பலா தள்ளப்படவும் அமைந்தனர். சீவகசிந்தாமணியின் ஆசிரியர் ஒரு சவாலை ஏற்று அந்தப் பலதா மணத்து நூலை எழுதினார். அந்நூலை எழுதுவதால் அவர்தம் சமணத் துறவிக் கோட்பாட்டிலிருந்து நழுவக்கூடாது என்று கருதிய அவர் ஆசிரியர் அந்நூலை எழுதுவதற்கு முன்னர் அப்பக்கம் ஒடிய ஒரு நரியைக் காட்டி இதைப்பற்றி ஒரு நூல் எழுது என்று பணித்தார். அதனை ஏற்று நரி விருத்தத்தை எழுதினார். பின்னரே சீவகசிந்தாமணி உருவாகியது. - ஆயினும் அதன் மூலக்கதை வடமொழியிலுள்ளது. தமிழகத்தில் சமயத் தாக்கம் கோயில்களில் மட்டுமல்லாமல் மாந்தரின் அன்றாட வாழ்விலும் இடம் பெற்றது. அத்தாக்கத்தால் தமிழ் மரபுகள் பல குலைந்தன. தமிழ்ப் பண் பாடுகள் பல சிதைந்தன. ஒன்றில் நம்பிக்கை வைப்பது என்பதையே அடித் தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பல பொய்க் கதைகள் மாந்தரால் பெரிதும் போற்றப்பட்டன. சமயப் பெருக்கத்திற்காக அதன் தலைவர்கள் பல வியத்தகு செயல் களைச் செய்ததாகவும் பல செயற்கரிய வெற்றிகளைக் குவித்ததாகவும் எழுதி மாந்தரது பகுத்தறிவைச் சமயச் சிறைக்குள் அடைத்தனர், தமிழகத்தில் பிற சமயங்களைவிட சைவமும் அடுத்து வைணவமும் பரவலாக அமைந்தன. இரு சமயக் கோயில்களும் பல்கிப் பெருகியுள்ளன. அதிலும் சைவ சமயத்துத் துவக்கக் கடவுளாகிய பிள்ளையார் கோயில்கள் கணக்கிலடங்காதவை. தஞ்சை-திருவையாற்றுச் சாலையிலுள்ள கண்டியூர் எனும் ஊரில்மட்டும் நான்முகனுக்குக் கோயில் உண்டு. அக்கோயில் முன்னர்ச் சமணச் சார்பிலிருந்து பின்னர் வழி மாறிப்போயிற்று. அங்கும் திருநீறு வழங்கப்படுவதுண்டு. - . . - சமயத் தாக்கத்தால் நன்மைகள் விளையும் என்று மாந்தர் நம்பினர். அந்நம்பிக்கை வெற்று நம்பிக்கையாக அல்லது தன்னார்வ நம்பிக்கையாக அமைந்தனவே தவிர நம்பிக்கைக்கொள்ளும் அளவில் இல்லை. சைவம் மிகப் பரவலாக இருப்பினும் வைணவத்தார் தம் சமயத்தில் கொள்ளும் பிடிப்யா விற்குச் சைவத்தார் ஈடுசெய்ய முடியவில்லை. ஆயினும் திருநீறு வழங்கும் கோயில்களே மிகுதியாக உள்ளன. - ೩೧g குறிப்பிடும்போது தமிழில் படைக்கப்பட்ட சமயச்சார்புடைய • . . . خليتين இலக்கியங்கள் இலக்கிய அளவில் மிகப்பயன்பட்டுள்ளன. தமிழ் போற்றிக்குத் iš8