பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற பகுதிகள் அவ்வாறு செயலில் கொள்ளவில்லை. இந்நிலை வளர்வது தமிழ் வழியினரை மிக வாட்டத்திற்குள்ளாக்கும் என்றும் கொள்ள்லாம். புதுமைப் பற்றும் பழமை மறப்பும் தமிழகத்தில் நீடிக்குமானால் தமிழ் மாந்தரே அடையாளங் காணத்தக்கவராகப் போவர். ஒரு குமுகாயத்திற்கு எவ்வெவ்வகைத் தீங்குகள் நேர வேண்டுமோ அவையெல்லாம் வடமொழித் தாக்கத்தால் நேர்ந்துள்ளன. அத்தாக்கம் இந்நூலையும் தாக்கியுள்ளது. சூடாமணி நிகண்டு எனப் பெயர் பெற்றதும் அது பட்டியலிடும் உரிச்சொற்க ளில் பல வடமொழியாக இருப்பதும் கூர்ந்து நோக்கத்தக்கதாகும். தமிழகத்தில் இதற்கென்று ஒர் இயக்கம் தோன்றி அஃதும் இளைஞர் இயக்கமாக ஆகுமானால் ஒரளவு விடிவுகாலம் தோன்றலாம். அவ்விடி வைத் தரும் கதிரவன் ஒளியை எதிர்பார்ப்போமாக! 13, 6)பாவிக தமிழ்ச் சொல் இந்த ஆராய்வுரையின் தொடக்கத்தில் தமிழ்ச்சொல்லின் உருவாக்கம் பற்றிய அடித்தளம் காட்டப்பட்டது. தனக்கென ஓர் உயிரோட்டம் கொண்ட தாகத் தமிழ் வாழ்ந்தது; வளர்ந்தது. அவ்வுயிரோட்டப் பயிரோட்டத்தில் களைகள் தோன்றின. களையெடுப்பு நிகழவேண்டும். - தமிழ் மொழியைப் பற்றி பாரதிதாசன் முதலில் குரல் கொடுத்தார். அடுத்து பாவேந்தர் பாரதிதாசனார் பகுத்தறிவுட ன் கூட்டிக் குரல் கொடுத்தார். அவர் யாத்த தமிழியக்கம் என்னும் நூல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஆக்கக் கருத்துக்களைத் தருவதாகும். ஒவ்வொரு துறைக்கும் வழிவகுத்து அந் நூலைப் படைத்துள்ள ர். முதன்முதலில் தொடங்கும் பத்துப் பாடல் களே தமிழ்ச் சொல்லின் பொலிவுகளை அறிமுகப்படுத்துவனவாகும். பாரதி யின் தமிழுக்கு ஏற்றம் தந்தது மட்டுமன்றி ஆக்கமும் ஊட்டினார். பாடல்க ளால் இவர்கள் பயனளித்திருப்பினும் உரைநடை அளவில் மொழியறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்கள் மறைமலையடிகள் வழிநின்று தந்த மொழிக் கருத்துகள் பலவாகும். அவர் ஆய்வுகளால் தமிழ் வேர்ச்சொற்களும் வேரடிச் சொற்களும் வெளிப்பட்டன. அவை தமிழ்ப் பொலிவிற்கு எத்துணைக் காரண மாக அமைந்தன என்று நோக்குவது ஒர் ஆக்க எண்ணமாகும். அவர் தமிழின் ஒர் வேரடிச் சொல்லாக உல் என்பதைக் காட்டியுள்ளார். அவ்வேரடி யிலிருந்துதான் உல, உலவு, உலகம் என சொற்கள் வளர்த்து பல்கின. அவா கையாண்ட முறை தனியொரு தன்மை கொண்டதாயினும் உலகமொழிகளின் பாங்கையும் அணைத்துக் கொண்டதாகும். அவர்தம் ஆக்கத்தால் தமிழ்ச் சொற்களின் பொலிவை உணர்ந்து மகிழ முடிகின்றது. . 13}