பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

អា រ៉ែ சூடாமணி செய்யுள்-7 பொருள்: விரவிய-தமிழில் பலவாக விரவியுள்ள பெயர்ச்சொற்களுள் தேவர்பேர்-தேவப்பெயர்த் தொகுதியும் மக்கள்பேர்-மக்கட்பெயர்த் தொகுதியும் விலங்குபேர்-விலங்கின் பெயர்த் தொகுதியோடு மரம்பேர்-மரப்பெயர்த் தொகுதியும் இடம்பேர்-இடப்பெயர்த் தொகுதியும் பல்பொருள் பேர்-பல்பொருட் பெயர்த்தொகுதியும் செயும் வடிவுபேர்-செயற்கை வடிவப் பெயர்த் தொகுதியும் பண்பு யேர்-பண்பு பற்றிய பெயர்த் தொகுதியும் - 竣 - - - - - * - ് போற்றிய செயல் பேர்-பேணி மேற்கொள்ளப்பெறும் செயல் பற்றிக்: பெயர்த்தொகுதியும் ஒலி பேர்-ஒலி பற்றிய பெயர்த்தொகுதியும் "s حمير: ஒருசொல் பல்பொருளினோடும் பேர்-ஒருசொற் பல்பொருட் பெயர்த் தொகுதியுடனும் உரைத்த பல்பெயர்க் கூட்டம் பேர்-தினாகரத்துள் சொல்லப்பெற்ற பல்பெயர்க் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதியும திவாகரம் வரும் முறை போல் வைத்து-திவாகரத்தில் வரும் முறைபோல வைத்து பிங்கலந்தை தன்னில்-பிங்கலந்தையில் பொருள் விளக்கம்: விலங்கு ஒடு-தேவர். மக்கள், விலங்கு எனக் குறித்த உயிர்ப்பொருள்களி னின்றும், தொடர்ந்து வரும் மரம், இடம் முதலிய உயிரல் பொருள்களைப் பிரித்துக்காட்ட ஒடு சேர்த்தார் போற்றிய-எச்செயலைச் செய்யினும் அதனைச் செய்வோர் அதனில் மனம் வைத்துப் பேணி மேற்கொள்ளும் ஒலி பேர்-பேர், பெயர் என்னும் பொருளில் இடைநிலை விளக்காக வைக்கப்பெற்றது. 12 வகைகளுடனும் சென்று சோந்து பொருள் தரும். பத்துத்தொகுதிகளும் ஒருபொருட் பல்பெயர்த் தொகுதிகள். ஆகையால் பத்தாவதாகிய ஒலியில் 'ஒடு சேர்த்தார். பொருளின் ஒடு உம்-11ஆவதாகிய ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி, எதுகைச் சொல்லமைப்புடையது; அகரமுதலி போல. 12ஆவது 'பல்பெயர்க்கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்பது இருசுடர், முத்தமிழ் முதலிய கூட்டப் பெயர்ப் பொருளை விரித்துச் சொல்லும் பகுதி. 11