பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் சூடாமணி செய்யுள்-8 குற்றம் இயம்பிடார்-அவையில் குற்றம் கூறாமை சான்றோர் இயல்பு. குற்றம் இருப்பினும் 'சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை ஈன்றார்க் கிறப்பப் பரிந்து” என்று நாலடியாரும் குறித்தார். இவ்வாசிரியர் தேர்ந்த மொழிப்புலவராக இந்நூலைக் குற்றமறச் செய்திருப்பினும் இதனை அவையடக்கமாகக் கூறுகின்றார். திருப்புகழ் புராணம் - இப்பெயரில் ஒரு நூல் உண்டென்றும் கூறுவர். குணபத்திரன் - இந்நூலாசிரியரின் ஆசிரியர். சமணச் சான்றோர். மன்னன் போன்ற சிறப்புடன் புலமை நடத்தியவர். ஒவ்வொரு தொகுதியின் கடைக்காப்புப் பாடலும் இவரைப் போற்றிப் பாடுகின்றார். மண்டலவன் - நூலாசிரியர். மண்டல புருடர் எனப் பிற்காலத்தில் குறிக்கப்பெற்றார். ஆய்வுரையில் விவரங்கள் உள. தான், ர - அசைகள்