பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சொல்லுக்கு ஒரு பொருளில் இவ்வாறு அழுத்தம் பிறக்கும். ஒரு சொல்லுக்குப் பல பொருள் கிடைக்கும்போது, பொருள் ஏற ஏற அழுத்தம் புதுப்பிக்கப்பெறும், ஒரு பொருளுக்குப் பல சொல் அமையும்போது சொல் வளர வளரப் பொருளின் அழுத்தம் வைரமாகும். இவ்வாறமையும் ஒருசொல் பல பொருள், ஒரு பொருள், பல சொல்லுக்குப் பொருள் அழுத்தம் உரிமை கொள்கிறது. இவ்வகை அழுத்தம் கொள்ளும் உரிமையை அகலமாகவும். சற்று ஆழமாகவும் பெற்ற உரிச்சொல் பண்பட்ட மொழிகளுக்கு உரியது. எனினும் பைந்தமிழுக்கு ஈடுபாடான உரிமை கொண்டது. இவ்வாறு உரிச்சொல், பொருட்கு உரிமை கொள்வதைச் சொல்லிலக்கணத் தந்தை தொல்காப்பியர், ஒரு சொல் பல் பொருட்கு உரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும் - என உரிமைப்படுத்திப் பேசியிருப்பது சான்றை ஒலிக்கிறது. தமிழில் உரிமை தோன்றிப் பல்கும் உரிச்சொல் பெருகியது; விரிவடைந் தது. இவற்றின் தொகை நூல் 'உரிச்சொற் பனுவல்' என உருவெடுத்தது. இவ்வுருவின் ஒளி உருவாக, மணியொளியாக மிளிரும் நூல் சூடாமணி’ என வழங்கப்பெறும் நூல். இந் நூல் இங்கு ஆழ்ந்து ஆயப்பெறுகின்றது. பூங்கொடியில் பூத்த மலர்களை ஆய்வது போலன்றி ஒர்ந்தும், தேர்ந்தும் ஆர்ந்தும் ஆயப் பெறுகின்றது. ஆர்ந்து - ஆம் நிறைவாக - ஆர ஆயப்பெறுவதால் இது ஆராய்வு. - - v , ஆர ஆய்வு என்பதால் அடித்தளம் இறுக்கமாக, மேல்வரும் முடிவு களுக்கு ஈடுகொடுக்கும் உறுதித்தனமாக உரிய சான்றுகளைக் கொள்ள வேண்டி யுள்ளது. எனவே படிப்படியாக, சரட்டுத் தொடர்பாக இவ்வாராய்வு விரிவா கின்றது. விவரம், விளக்கம், விரிவு என்று வளரும்போது சில மிகையாகப் படினும் பின் வேண்டிய தெளிவைக் காணுதற்கு இவை இன்றியமையாதன வாகும். முதல் நோக்கில் தொடர்பற்றவை போன்று சில படினும் இறுதி 8. தொல்காப்பியர்: தொல்-சொல்-உரி. 1–45 9 மயிலைநாதர்: - நன்னுரல் 460 உரை 3