பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள் 13 அருகன் நிறைவு நிருமலன்வரதன் சாதுநிரஞ்சனன்விறலோன்யோகி தருமராசன்யுகாதிசதுர்முகன்சாதருபி திரு மறுமார்பன் நீடுசிவகதிக்கிறைதொண்ணுாறே அருகன்பேராகுமற்றுமபிதானமனந்தமாமே 13 நிருமலன், வரதன், சாது நிரஞ்சனன், விறலோன், யோகி தருமரா சன்யு காதி, சதுர்முகன், சாத ரூபி, திருமறு மார்பன், நீடு சிவகதிக் கிறைதொண் ணுாறே அருகன்பேர் ஆகும் மற்றும் அபிதானம் அனந்தம் ஆமே. பெ. பொ. விளக்கம் : வரதன்-வரம் அளிப்பவன் நிரஞ்சனன்-குற்றம் இல்லாதவன் விறலோன்-வலிமையுள்ளவன் யுகாதி-உலகத் தோற்ற முதல்வன் சதுர் முகன்-நான்கு முகங்களை உடையவன் சாதரூபி-பொன் போன்ற நிறத்தவன் - திருமறு மார்பன்-திருமகளை மறுவாக மார்பில் கொண்டவன் சிவகதிக்கு இறை-செம்மையான வீட்டுலகிற்குத் தலைவன் தொண்ணுாறு-அருகன் பெயர்களின் கூட்டுத்தொகை எண் அபிதானம்-பெயர் . அனந்தம்-கணக்கற்றது நீடு-அடைமொழி